கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் சாறுகள்: கண்டிப்பா குடிங்க
இந்த காலத்தில் பலரை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையும் ஒன்று. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், கல்லீரலில் படிந்திருக்கும் இந்த கொழுப்பு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கல்லீரல் செயலிழப்பு ஆகிய அபாயங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு இயற்கையான வழியில் நிவாரணம் காண உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குர்குமின் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீரைக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
எலுமிச்சை (Lemon) மற்றும் இஞ்சி (Ginger) சாறு கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும். இஞ்சி செரிமான அமைப்பை சீராக்கி, உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை அகற்றி கல்லீரல் நோய்களில் இருந்து மீள்வதை எளிதாக்குகிறது. இஞ்சி எடை இழப்பிலும் உதவியாக இருக்கின்றது.
பீட்ரூட் சாறு உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்கிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. பீட்ரூட்டில் பீடைன் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இது இரத்தசோகைக்கும் நிவாரணமாக அமைகின்றது. பீட்ரூட் சாறை வெறும் வயிற்றில் குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் குணமாகும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கேரட் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிய அளவில் உதவுகின்றது. வெறும் வயிற்றில் கேரட் சாறு குடிப்பது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்த உதவும். இது கண்களின் ஆரோக்கியத்திற்கும் இரத்த சோகை பிரச்சனையை சரிசெய்யவும் உதவுகின்றது.
வீட்கிராஸ் சாறு கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதில் உள்ள குளோரோபில் கல்லீரல் செல்களை சீராக்க உதவுகின்றன. இதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் இதை வெறும் வயிற்றில் குடிப்பது அதிக அளவில் நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.