சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா? கண்கவர் இந்திய சுற்றுலாத் தலங்கள்

Wed, 02 Feb 2022-2:22 pm,

தார் பாலைவனம், ராஜஸ்தான் உலகின் 18வது பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட கிரேட் இந்திய பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தைப் போல அழகாக இருக்கிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் இங்கு செல்ல சிறந்த மாதங்கள்.

குருடோங்மார் ஏரி, சிக்கிம் சிக்கிமின் வடக்கே உள்ள இந்த ஏரி, இந்தியாவின் இரண்டாவது உயரமான ஏரியாகவும், உலகின் 15 உயரமான ஏரிகளில் ஒன்றாகும். இந்த இந்திய ஏரி ஐஸ்லாந்தில் உள்ள ஐஸ்லாந்தின் ஜக்குல்சார்லன் ஏரியை ஒத்திருக்கிறது.

லட்சத்தீவு  லட்சத்தீவின் கடல்வாழ் உயிரினங்கள், அழகான இயற்கை மற்றும் தூய்மையான சூழல் மாலத்தீவை நினைவுபடுத்துகிறது, அங்கு நீங்கள் நடைபயிற்சி செல்லலாம், ஆனால் இங்கு செல்ல நீங்கள் லட்சத்தீவு நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

ஆலப்புழா, கேரளா  படகுகளில் மீன்பிடித்தல், படகுப் போட்டி உள்ளிட்ட பல விஷயங்கள், சுற்றுலாப் பயணிகளை கேரளாவின் ஆலப்புழா கவர்கிறது. பசுமையான வயல்வெளிகள், பறவைகளின் இன்னிசை, தண்ணீரில் வாத்துகள் என வெனிஸில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் ஆலப்புழா...

குல்மார்க், ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஸ்ரீநகரில் இருந்து சுமார் 52 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய குல்மார்க் நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருந்து வருகிறது. பனி மூடிய சிகரங்களைப் பார்த்து, மக்கள் அதை சுவிட்சர்லாந்துடன் ஒப்பிடுகிறார்கள்  குல்மார்க் பூமியின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் 270 வகையான பறவைகளின் தாயகம் அந்தமான் நிக்கோபார் தீவுகள்... தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பிரபலமானது, அந்தமான்-நிகோபார் தீவுக்கூட்டம் தாய்லாந்தின் ஃபை ஃபை தீவுகளை நினைவூட்டுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link