Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!
தி.நகர்:
தியாகராய நகர் பகுதியில் இருக்கும் சுரங்கப்பாதைகள் மற்றும் சில சாலைகள் மழை நீரில் தத்தளிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த சாலைகளுக்கு மாற்றாக வேறு சாலையில் செல்லவும்.
பெரம்பூர்:
பெரம்பூரில் இருக்கும் தாழ்வான சாலைகளில் கனமழையின் போது மழை நீர் தேங்க வாய்ப்புள்ளது.
வட சென்னை:
திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இருக்கும் பல சாலைகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, இங்கு செல்லும் போது கவனமாக செல்லவும்.
ஈக்காட்டுத்தாங்கல்:
ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருக்கும் பல சாலைகளில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மழையின் போது, தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் சாலைகளை இந்த ஏரியாவில் தவிர்க்கவும்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சாலைகள், மழை நீர் தேங்குதலை சந்தித்திருக்கின்றன. இந்த சாலைகளை தவிர்ப்பது நன்று.
மழையின் போது கடற்கரை மற்றும் அதற்கு அருகில் இருக்கும் சாலைகளை தவிர்க்கவும்.
அடையாறு நதி:
அடையாறு நதி அருகில் இருக்கும் பாலம் மற்றும் சாலைகள், 2015ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையாக இருக்கிறது. இந்த முறையும் கனமழையால் அந்த பகுதி பாதிப்படையாலாம். எனவே இந்த சாலையை தவிர்ப்பது நல்லது.
அண்ணா சாலை:
பல்வேறு பகுதிகளை இணைக்கும் சாலையாக இருக்கிறது, அண்ணா சாலை. இந்த சாலையிலும் பல ஏற்றத்தாழ்வான பகுதிகள் இருக்கின்றன. வாகன ஓட்டிகள் மழைக்காலத்தின் போது இங்கிருக்கும் தாழ்வான ரோடுகளை தவிர்த்து, மெயின் சாலையில் செல்வது நல்லது.