யாரும் சிக்சர் அடிக்க முடியாத 5 பந்து வீச்சாளர்கள்
நீல் ஹாக் (ஆஸ்திரேலியா); முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் நீல் ஹெவ்க் 1963 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 145 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருடைய கிரிக்கெட் வாழ்கைகயில் 6 ஆயிரத்து 987 பந்துகளை வீசியுள்ளார். ஆனால் ஒருமுறைகூட எந்த பேட்ஸ்மேனும் சிக்சர் அடிக்கவில்லை.
முடாசர் நாசர் (பாகிஸ்தான்); 1976 முதல் 1989 வரை பாகிஸ்தானுக்காக விளையாடிய முடாசர் நாசர், 76 டெஸ்ட் மற்றும் 112 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பவுலராக 5867 பந்துகளை முடாசர் நாசர் வீசினார். ஆனால் எந்த பேட்ஸ்மேனும் இவரது பந்தில் சிக்சர் அடிக்க முடியவில்லை.
முகமது உசேன் (பாகிஸ்தான்); பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது உசேன் 1952-1953 இந்திய சுற்றுப்பயணத்தின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பாகிஸ்தானுக்காக ஹுசைன் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 5910 பந்துகளை வீசி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய பந்துவீச்சில் யாரும் சிக்சர் அடித்ததில்லை.
கீத் மில்லர் (ஆஸ்திரேலியா); ஆஸ்திரேலியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கீத் மில்லர், தனது வாழ்க்கையில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 ஆயிரத்து 461 பந்துகளை வீசிய இவருடைய பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் சிக்சர் அடித்ததில்லை.
டெரெக் பிரிங்கிள்; இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர். கென்யாவில் பிறந்த டேரன் ஒரு பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பந்துவீசவும் செய்த அவர், 5 ஆயிரத்து 287 பந்துகள் வீசியுள்ளார். 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவரது பந்துவீச்சில் ஒரு சிக்சர்கூட அடிக்கப்படவில்லை.