இந்த பிரச்சனைகள் உடலில் தெரிகிறதா? அப்போ உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும்
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க, 20 வயதிலிருந்தே, ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை உடம்பில் சேத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், முக்கியமாக கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள்.
உங்கள் எடை தீடிரென்று அதிகரித்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.
அதிகப்படியான கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சுழலத் தொடங்கும் போது, கொழுப்பு உங்கள் தோலின் கீழ் உருவாகிறது, இதனால் எண்ணெய் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பருக்கள் தோலில் தோன்றும்.
இரவில் தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் கண்டிப்பாக ஒருமுறை கொலஸ்ட்ராலை பரிசோதித்துக்கொள்வது நல்லது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், கை மற்றும் கால்களில் இரத்த ஓட்டம் குறையத் தொடங்கும், இதனால் கை மற்றும் கால்களில் உணர்வின்மை வரத் தொடங்கும்.
இரவு நேரங்களில் உங்கள் பாதங்களில் எரியும் உணர்வு ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.
இரவு தூங்கும் போது நெஞ்சு வலி ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இது அதிக கொலஸ்ட்ராலின் அளவை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறியாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.