குரு ராகு சேர்க்கை: குரு சண்டாள யோகம் இந்த ராசிகளை பாடாய் படுத்தும், எச்சரிக்கை தேவை
)
குரு சண்டாள யோகம் அசுபமானது. இந்த யோகத்தின் உருவாக்கத்தில் இருந்து எதிர்மறை உணர்வுகள் எழத் தொடங்குகின்றன. குரு-ராகு இணைவு அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
)
மேஷ ராசிக்காரர்களுக்கு தேவகுரு மற்றும் ராகு சேர்க்கை சிறிதும் சிறப்பாக இருக்காது. ஏப்ரல் 22ம் தேதிக்கு பிறகு இந்த ராசியில் இரு கிரகங்களும் வருவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இந்த நேரம் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது.
)
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு, ராகு சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம் சோதனைகளில் பாரத்தை சுமத்தும். இந்த காலத்தில் பெருமளவு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் உள்ள வரையில், எதிலும் முதலீடு செய்வதைத் தவிர்த்து, பணப் பரிவர்த்தனைகளில் சிறிது கவனமாக இருங்கள்.
குரு மற்றும் ராகு இணைவது கடக ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கூட்டணி மிகவும் மோசமானதாக இருக்கும். இவர்கள் வாழ்வில் பல சிரமங்கள் எழும், ஒவ்வொரு அடியிலும் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரத்தில், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாக எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்கவும்.
குரு ராகு இணைவதால் சிம்ம ராசிக்காரர்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரி பிரச்சனைகளை உருவாக்கலாம். வீட்டில் வாக்குவாத சூழ்நிலை உருவாகலாம். பேச்சில் நிதானம் இருக்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை