குருவின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு நஷ்டம் அதிகரிக்கும், அமைதி குலையும்
மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழன் 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதி ஆவார். குருவின் தாக்கத்தால், இவர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களை நியாயமற்ற செயல்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், முதலீட்டைத் தவிர்க்கவும்.
இந்தக் காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்குச் செலவுகள் அதிகரிக்கும். அதன் விளைவாக பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உடல்நிலை மோசமாகலாம். ஆகையால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப பிரச்சனைகள் வரக்கூடும். அவர்கள் வீட்டில் சில சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம். புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க விரும்பும் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரம் சாதகமாக இருக்காது என்பதால் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
கன்னி ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல்நலக் கோளாறுகளும் இருக்கலாம். இந்த கால கல்லத்தில் அனைவருடனும் மிகுந்த பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
துலா ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். தொழில்/வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். வாழ்க்கை துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சில பிரச்சனைகள் வரக்கூடும். வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)