ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகும் 4 முக்கிய திரைப்படங்கள்! முழு லிஸ்டை பாருங்க..
ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகும் படங்கள்:
வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு தமிழ் படங்கள் வெளியாகின்றன. அதில் அனைத்தும் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
தங்கலான்:
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், தங்கலான். இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படம், 2024ஆம்ஆண்டின் மார்ச் மாதத்திலேயே வெளியாக இருந்தது. ஆனால், சில பணிகள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
ரகு தாத்தா:
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ரகு தாத்தா. இதில் அவருடன் சேர்ந்து எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் ரவிந்திரநாத், ரவிந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ரகு தாத்தா படத்தை சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இதில் கீர்த்தி, கயல்விழி எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆகஸ்டு 15ஆம் தேதி திரையரங்குகளில் பார்க்கலாம்.
டிமான்டி காலனி2:
2015ஆம் ஆண்டு வெளியாகி பலரை அலற விட்ட திரைப்படம், டிமாண்டி காலனி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. இதிலும், அருள்நிதிதான் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை ஆகஸ்டு 15ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பார்க்கலாம்.
டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதி உடன் சேர்ந்து பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
அந்தகன்:
இந்தியில் பெரிய ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, அந்தாதுன். இந்த படத்தின் தமிழ் ரீ-மேக்தான் அந்தகன். இதில், பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார். மிஸ்டரி-காமெடி-த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் வில்லியாக வருகிறார் சிம்ரன். இந்த படத்தின் ரிலீஸ் பல ஆண்டுகளாக தள்ளிப்போனதை அடுத்து, ஒரு வழியாக ஆகஸ்டு 15ஆம் தேதியன்று இப்படம் வெளியாகிறது.
அந்தகன் ஆல்பம்:
GOAT படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த் நடித்து வருவதை தொடர்ந்து, அந்தகன் படத்தின் ஆல்ப பாடலை விஜய் சமீபத்தில் ரிலீஸ் செய்தார்.