IPL Records: ஒரு ஓவரில் எத்தனை சிக்ஸர் அடிக்க முடியும்? பெட் வச்சுக்கலாமா?
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடிப்பது சுலபமா? இல்லை என்றாலும் பல சாதனை பேட்டர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்
16 சீசன்களில் பல சாதனைகள் படைக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தருணங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன. ஐபிஎல்லில் ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட்டர்கள்
யுவராஜின் 6 சிக்ஸர்கள் யுவராஜ் சிங் டி20 போட்டியில் 6 சிக்சர்கள் அடித்த அரிய சாதனையை படைத்தார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் இதனை சாதித்தார். ஆனால் அவரால் ஐபிஎல்லில் இந்த சாதனையை செய்ய முடியவில்லை, ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் என்ற சாதனையை யாரும் படைக்கவில்லை. ஆனால் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது
கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 2012ல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மாவின் பந்துவீச்சில் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்தார். இன்னிங்ஸின் 13-வது ஓவரில் ஆர்சிபி வீரர் ராகுலை தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களுக்கு அடித்தார்.
ராகுல் தெவாடியா ஐபிஎல் 2020 இல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது ராகுல் தெவாடியா, பஞ்சாப் கிங்ஸின் ஷெல்டன் காட்ரெலின் பந்துகளில் அடுத்தடுத்து ஐந்து சிக்ஸர்கள் அடித்தார். அவரது அற்புதமான மறுபிரவேசம் 224 என்ற இலக்கை துரத்த ராஜஸ்தான் அணிக்கு உதவியது
ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2021 இல், இன்னிங்ஸின் 19 வது ஓவரில் RCB இன் ஹர்ஷல் படேலின் பந்துகளை எதிர்கொண்டு, ஐந்து பெரிய சிக்ஸர்கள் அடித்தார்.
ரிங்கு சிங் இந்த ஐபிஎல் 2023 ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் பந்துகளுக்கு தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை அடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (அணியின் ஹீரோவாக ரிங்கு சிங் மாறினார். கடைசி ஓவரில் வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு ஐந்து சிக்ஸர்களை அடித்தார். KKR அணிக்கு ஒரு மறக்கமுடியாத வெற்றியைக் கொடுத்த இந்த ஆட்டம் இண்டியன் சூப்பர் லீக்கின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும்.
ஐபிஎல் போட்டிகளில் இது போன்ற பல அரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது