இந்தியாவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு ஒருமுறையாவது சென்றுவிடுங்கள்!
ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா
இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக உள்ளது. இதன் உயரம் 830 அடி ஆகும்.
அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி, கேரளா
அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி இந்தியாவில் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சி ஆகும். காடுகளுக்கு நடுவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா
கோவாவில் உள்ள மாண்டோவி ஆற்றில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான நீர்வீழ்ச்சி துத்சாகர் நீர்வீழ்ச்சி ஆகும். இதன் உயரம் 1,017 அடி ஆகும்.
சிவனசமுத்திர நீர்வீழ்ச்சி
சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சியானது பரச்சுக்கி நீர்வீழ்ச்சி மற்றும் கன்னடகி நீர்வீழ்ச்சி என இரண்டு தனித்தனி நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.
நோகலிகை நீர்வீழ்ச்சி, மேகாலயா
பூமியின் மிக ஈரமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி நோகலிகை ஆகும். இதன் உயரம் 1,098 அடி ஆகும்.
கெம்ப்டி நீர்வீழ்ச்சி, முசோரி
முசோரிக்கு அருகிலுள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கு குளிப்பதற்கு ஏதுவான பல குளங்கள் உள்ளன.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, தமிழ்நாடு
காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டின் மிகவும் பிரதிபெற்ற சுற்றுலா தளம் ஆகும். இங்கு படகு சவாரி வசதியும் உள்ளது.
சூச்சிபாரா நீர்வீழ்ச்சி, கேரளா
சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி ஆனது சென்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது வயநாட்டில் அமைந்துள்ளது.