பயணங்களின் போது வாந்தி ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
பயணத்தின் போது வாந்தி பிரச்சனை இருந்தால் லேசான உணவை உண்ண வேண்டும். அதிகபடியான உணவை உண்பது பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
கிராம்பு உடலில் உள்ள நோய்களை நீக்குவதற்கு மிகவும் உதவுகிறது. கருப்பு உப்பு சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனையும் நீங்கும்.
வாந்தியை நிறுத்த எலுமிச்சையும் சிறந்த வழியாகும். எலுமிச்சை வாசனையால் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக இருக்கும்.
புதினா இலைகள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது வயிற்றில் எரியும் உணர்வு பிரச்சனையையும் நீக்குகிறது. பயணத்தின் போது அதை உங்கள் பையில் வைத்திருக்க வேண்டும்.
பயணம் செய்யும் போது வாந்தி எடுத்தால் உடல் வலுவிழந்து பயணத்தை அனுபவிக்க முடியாமல் போகும். உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை இருந்தால், ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுங்கள்.