பாடாய் படுத்தும் முகப்பருக்கு தீர்வு தரும் இயற்கை வைத்தியங்கள்
டீ ட்ரீ ஆயில்: முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்க டீ ட்ரீ ஆயிலைப் பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் அரிப்புகளை அகற்ற உதவுகிறது.
முல்தானி மெட்டி: முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்தலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் சிறு சிறு பருக்கள் நீங்கி சருமம் பளபளப்பாகும்.
தேன்: முகத்தில் இருக்கும் சிறு பருக்களை நீக்க தேன் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்க உதவும்.
சந்தனம்: முகத்தில் உள்ள சிறு பருக்களைப் போக்க சந்தனத்தை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் சந்தனப் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.
கற்றாழை: சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை மிகவும் சிறந்த பலனைத் தரும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சரும எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.