உதடுகள் கருப்பாக உள்ளதா? சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பல இடங்களில் படித்து இருப்போம். மேலும் சிகரெட் விற்கப்படும் அட்டைகளிலும் இடம் பெற்று இருக்கும்.
இருப்பினும் சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் இதனை நிறுத்துவதில்லை. தினமும் சிகரெட் பிடிப்பதால் உடல் பலவீனப்படுத்துகிறது, பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
புகைபிடிப்பதால் பற்களும், உதடுகளும் பாதிக்கப்படுகின்றன. புகைபிடிப்பதால் உதடுகள் கருப்பாக மாறுகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சிகரெட் பிடிக்கும் போது உதடுகளைச் சுற்றியுள்ள சரும செல்கள் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. மேலும் சிகரெட்டில் நிகோடின் இருப்பதால், இரத்த நாளங்கள் சுருங்கும்.
இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. நிகோடினின் வெளிப்பாடால் உதடுகள் கருப்பாக மாறுகிறது.
உதடுகளில் உள்ள கருப்பு நேரம் போக ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் எடுத்து உதடுகளில் நன்றாக தேய்க்கவும். இதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
மேலும் உதடுகளில் உள்ள கறுப்பு நிறத்தை அகற்ற காபினை பயன்படுத்தலாம். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருப்பு நிறம் மாறும்.