Astro 2022 May 28: 5 ராசிகளுக்கு அற்புதமான பலன்களைத் தரும் சனீஸ்வரர்
இன்று குழப்பமாக இருப்பதைப் போல் நீங்கள் உணரலாம், அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம். எரிச்சலாகவும் குழப்பமாகவும் இருந்தாலும் அது மதியத்திற்கு பிறகு சரியாகிவிடும். உங்கள் நாளின் இரண்டாம் பாதி சீராக இயங்கும், வேலையை முடிக்கத் தேவையான ஆற்றலைப் பெறுவீர்கள்.
உங்கள் இதயத்திற்கு மிகவும் பிடித்த ஒன்று இன்று உங்களை விட்டு நழுவக்கூடும். ஆனால் அது சிறந்தது. நீங்கள் நீண்ட காலமாகப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த ஒன்றை விட்டுவிட வேண்டிய நேரம் இது. கடந்த காலத்தை ஆராய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கான புதிய விஷயத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு, கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்.
நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பணிகளை மதிப்பாய்வு செய்வது முக்கியப் பணியாக இருக்கும். சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லையே என்று சலிப்பு ஏர்படும். ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ நீங்களும் உங்கள் திறமையும் தேவை. எனவே சலிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு வேலை செய்யுங்கள்.
இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவும்படியான வேலைகளை நீங்கள் செய்வீர்கள். வேலை விஷயத்தில் மனதில் படுவதை தெளிவாக சொல்லிவிடுவது நல்லது. அப்போதுதான், உங்கள் உத்திகளைச் செயல்படுத்துவதற்கு மற்றவர்கள் தயாராக இருப்பார்கள். உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நீங்கள் தானே
இன்று உறவுகள் உங்களுக்கு சவாலாக இருக்கலாம். உங்களுடன் யாரும் வெளிப்படையாக இல்லை என்றும், மற்றவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்வதாகவும் நீங்கள் உணரலாம். இந்த எண்ணம் தோன்றினால் அதை உடனடியாக வெளியே தள்ளவும். யாரும் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை, வேறு வேலைகளில் பிறர் பிஸியாக இருக்கலாம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இன்று, பிறரை நினைத்து உங்கள் மனதிற்கு குழப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இன்று உங்கள் பற்றிய பிறரின் எண்ணங்களை தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் தவறவிட வேண்டா. நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செய்கிறீர்கள் என்பதை தெரிந்துக் கொள்வதும் நல்லதுதானே? சில சமயங்களில் ஈகோ பூஸ்ட் தேவைப்படுகிறது. இன்று உங்களைப் பற்றிய நல்ல கருத்துக்களை கேட்கும் நாளாக இருக்கும்.
எந்தவொரு விஷயத்தையும் தள்ளிப்போடுவது சரியல்ல என்றாலும், சில விஷயங்களை செய்ய சரியான நேரம் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவர் நீங்கள். ஆனால், இன்று ஏதாவது செய்ய விரும்பினால், உடனடியாக அதைச் செய்யுங்கள். அவசரமான முடிவுகள் இன்று உங்களுக்கு சிறந்ததாக மாறும். இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் இன்றைய உங்கள் ராசிபலன் இதைத் தான் சொல்கிறது
இன்று ஆச்சரியமான நாளாக இருக்கும். எதிர்பாராத ஒருவர் உங்களுடன் இணையப் போகிறார். பொதுவாக உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து விலகியிருக்கும் உங்களுடன் பலரும் நெருங்கவே தயங்குவார்கள். ஆனால், யாரோ ஒருவர் அந்த முரண்பாடுகளைக் கடந்து உங்களை நோக்கி வரப் போகிறார். இந்த நபரை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்களைத் தள்ளிவிடாதீர்கள். எல்லோரும் உங்களை அணுகுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்த நபர் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுப்பவராக இருக்கலாம்.
நீங்கள் சொல்வதை மற்றவர்கள் தவறாக புரிந்துக் கொள்வார்கள். எனவே, மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். இல்லாவிட்டால், உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே எதையும் சொல்வதற்கு முன் யோசித்து செயல்படவும்
ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று சோர்வாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். இன்று உடல்நிலை குறைபாடு ஏற்பட வாய்ப்பு தென்படுகிறது.
வித்தியாசமான கண்ணோட்டத்துடன் விஷயங்களைப் பாருங்கள். எப்பொழுதும் விஷயங்களை ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கிறீர்கள், அது நல்லதல்ல. உங்களுக்கு வசதியான இடத்தில் இருந்து மட்டுமல்லாமல், மற்றவர்களின் கோணத்திலும் விஷயங்களை பார்ப்பது நல்லது. பிறரின் யோசனைகளை ஏற்றுக்கொள்வது உங்கள் வளர்ச்சியின் முதல் படியாக இருக்கும்.
இன்று மிகவும் பிஸியாக இருப்பீரிகள். முழுமையாய் முடிக்கப்படாத பணிகளை முடிக்கும் நாளாக இது இருக்கும். குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல், திட்டமிட்டு செயல்பட விரும்புவீர்கள். அன்பானவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.