லக்கி பாஸ்கர் ஆவது எப்படி? 8 முக்கியமான கோடீஸ்வர பார்முலா...!

Thu, 12 Dec 2024-2:40 pm,

லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் - மீனாட்சி சவுத்திரி நடித்திருந்தனர். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். வங்கி - பங்குச்சந்தை, ஷேர் மார்க்கெட் உலகின் அடிப்படையில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

துல்கர் சல்மான் (Dulquer Salmaan) வங்கி ஊழியராக நடித்திருந்தார். மீனாட்சி அவருக்கு மனைவியாக நடித்தார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த மீனாட்சி, காதலித்து பாஸ்கரை (துல்கர் சல்மான்) திருமணம் செய்து கொள்வார். பெற்ற தாய் கூட லக்கி பாஸ்கராக நடித்த துல்கரை விட்டுவிட்டு வரும்படி மகள் மீனாட்சியிடம் பார்த்து கூறுவார். ஆனால் அந்த நேரத்தில் காதல் கணவர் தான் வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்து துல்கருடன் இருப்பார் மனைவி மீனாட்சி.

மீனாட்சி நினைத்திருந்தால் துல்கரை விட்டுவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் காதல் அவரை அவ்வாறு செய்யவிடவில்லை. இருவரும் சாதாரண வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் பொருளாதார தேவை அதிகம் இருக்கிறது. வங்கி ஊழியராக லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) துல்கர் இருந்தாலும் அந்த சம்பளம், குடும்ப செலவு, அப்பா மருத்துவ செலவு, தம்பி, தங்கை படிப்பு செலவுக்கே போதாக்குறையாக இருக்கிறது.

இந்த இடத்தில் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகாமல் துல்கர் சல்மான் நடந்து கொண்டு மனைவி, தம்பி தங்கை, அப்பா மற்றும் குழந்தை என எல்லோருக்கும் தேவையான  விஷயங்களை செய்து கொடுப்பார். வீட்டுக்கு வரும் வருவாயில் எப்படி குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டும், அதில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் துல்கரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். 

அடுத்து துல்கர் தன்னுடைய வேலையில் உண்மையுள்ளவராக இருப்பார். கடினமாக உழைப்பார். துல்கர் சல்மானின் இந்த அணுகுமுறை பணிபுரியும் இடத்தில் அவருக்கான நன்மதிப்பை பெற்றுக் கொடுக்கும். பதவி உயர்வுக்கு இவர் தகுதியானவர் என சக வங்கி ஊழியர்களே சொல்லும் அளவுக்கு துல்கர் சல்மானின் நடத்தை, நேர்மையான அணுகுமுறை, அனைவரிடமும் சகோதரத்துவத்துடன் பழகும் சுபாவம் இருக்கும். ஒரு பணியிடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு லக்கி பாஸ்கர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இதை கற்றுக் கொள்ளலாம். 

லக்கி பாஸ்கர் படத்தில் நெருக்கடியான காலங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் துல்கர் சல்மான் கூறியிருப்பார். "ஒரு நாளில் அரைமணி நேரம் நன்றாக இல்லை என்பதற்காக அந்த நாள் முழுவதும் நான் சோகமாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை." என கூறியிருப்பார். இந்த வாசகத்தை எல்லோரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. கெட்ட விஷயங்களை மறந்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.

 

எந்த விஷயத்தை செய்தாலும் அதில் தெளிவு, சூழல்களை வெற்றிகரமாக கையாளும் திறமை இருந்தால் வெற்றி உறுதி என்பதை துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் கேரக்டர் மூலம் கூறியுள்ளார். ஒரு விஷயத்திற்கு வரும் பல்வேறு சூழல்கள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் முன்கூட்டியே ஆராய்ந்து உங்களை அந்த அத்தனை விஷயங்களையும் எதிர்கொள்ள முன்பே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் லக்கி பாஸ்கர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

தவறு எந்த இடத்திலும் நடக்காமல் முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என லக்கி பாஸ்கரில் துல்கர் செய்து காட்டியிருப்பார். தவறு செய்தால் கூட அது பிறரை பாதிக்காமல், நம்பி வந்தவர்களை மாட்டிவிடாமல், யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்து வைப்பது எப்படி என்பதையும் இந்த லக்கி பாஸ்கர் மூலம் கற்றுக் கொள்ளலாம். 

இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினருடன் எப்படி இருக்க வேண்டும், அவர்களின் ஆதரவை பெற்று பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி? என்பதையும் லக்கி பாஸ்கர் திரைப்படம் தெரிவித்திருக்கிறது. குடும்பத்தினர் சப்போர்ட் இருந்தால் நிச்சயம் எப்பேர்பட்ட விஷயத்திலும் வெற்றி பெறலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படம் கூறியிருக்கிறது.

பணம் ஒருவரின் நன்மதிப்பை உயர்த்தும் மிகப்பெரிய கருவி. அதனை சம்பாதிக்க கற்றுக் கொள். பணத்தை சம்பாதிக்க சமயோசித்தமான முடிவுகளும், புத்திக்கூர்மையும் இருந்தால் சீக்கிரம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை லக்கி பாஸ்கர் கூறியிருக்கிறது. பணத்தை சம்பாதிக்க நேர்வழியை தேர்வு செய்வது எப்போதும் சாலச்சிறந்தது. இல்லையென்றால் மிகப்பெரிய சிக்கல் வரும் என்பதையும் இப்படம் கூறியிருக்கிறது. இதுபோன்ற இன்னும் பல நல்ல விஷயங்களை இப்படத்தின் மூலம் கற்றுக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைக்கும் உதவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link