வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு - பெறுவது எப்படி?

Fri, 11 Oct 2024-12:58 pm,

தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளம் வயதினருக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த திட்டத்திற்கு தகுதியான இளம் வயதினர் விண்ணப்பிக்கலாம். 

 

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பிற வாய்ப்புகளை வழங்கும். இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம், தமிழ்நாடு இளைஞர்கள் புதிய திறன்களைக் கற்றுக் கொண்டு எளிதாக வேலை பெற முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறதகுதியுடையவர்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில், திறன் மேம்பாட்டு பயிற்சியின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் எளிதாக வேலை பெற இந்த திட்டம் உதவும்.

இந்த திட்டத்தில் சேருவதற்கு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

 

Tamil Nadu Unemployment Assistance Scheme 2024 திட்டத்தில் விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, மெயில் ஐடி, மொபைல் எண், மின் கட்டணம் ரசீது அல்லது ஏதேனும் ஒரு முகவரிக்கான ஆதாரம், பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆவணங்களாக கொடுக்க வேண்டும்.

SSLC தோல்வியுற்றவர்களுக்கு மாதத்திற்கு INR 200/- நிதியுதவி வழங்கப்படுகிறது. SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு INR 300/, HSC-க்கு INR 400/- மற்றும் பட்டதாரிகளுக்கு INR 600/- வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பின்மை உதவித் திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் Tamil Nadu Unemployment Assistance Scheme 2024 அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு பின்னர் தேர்வு செய்யப்படுவீர்கள். மேலும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு Phone No:- 044-22500900, Phone No:- 044-22500911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link