மத்திய அரசின் சோலார் மின் திட்டம்... 300 யூனிட் இலவச மின்சாரம் பெற செய்ய வேண்டியவை!
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அயோத்தியாவில் நடந்த குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு சோலார் மின் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை, ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக, வீடுகளின் மேல் கூரை பகுதிகளில் சோலார் பேனல்களை பொருத்துவதற்கு மத்திய அரசு மானியங்களை வழங்குகிறது.
பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவசம் மின்சாரம் வழங்கும் வகையில், சுமார் ரூபாய் 75,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்படுகிறது.
வீட்டின் குறைகளில் சூரிய மின்சக்தி தகடு பொருத்துபவர்களுக்கு, அரசு மானியம் வழங்குவதோடு, இதற்கான வங்கி கடனும் கிடைக்கும். ஏழை எளியவர்களும் இதை பொருத்த வேண்டும் என்ற நோக்கில், மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கப்படுகிறது.
சூரிய மின்சக்தி திட்டத்தில் சேருவதற்கு https://pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான செயல்முறையும் மிகவும் எளிது. நீங்கள் வசிக்கும் மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பின், இதற்கு ஒப்புதல் கிடைத்த பின் வீடுகளில் சூரியமின்சக்தி பேனல்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.