மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டம் - பெறுவது எப்படி?

Tue, 27 Feb 2024-11:52 pm,

மருத்துவ செலவுகளுக்கான மருத்துவ காப்பீட்டை அரசு வழங்கி வருகிறது. அது  குறித்த போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு கொடுக்கும் திட்டம் இருக்கிறது. அதனைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

 

ஆயுஷ் மான் பாரத் யோஜனா மருத்துவ சேவைக்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கும் மேலாக மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு வழங்கும் மருத்துவ காப்பீடான இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். அதேபோல், தமிழகத்தின் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஆயுஷ்மான திட்டமும் இணைத்து செயல்படுத்தப்படுகிறது. 

 

இதில், 1354 சிகிச்சை திட்டங்கள் மற்றும் பல நவீன சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் 17000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 

 

இந்தியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையைப் பெற முடியும். பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மன ஆரோக்கியம் தொடங்கி இதய அறுவை சிகிச்சைகள் வரை பல்வேறு நவீன சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெற முடியும்.

 

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு விண்ணபிக்க, முதலில் healthid.ndhm.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள create ABHA number என்று இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம்.

 

ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

 

பின்னர் உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு abha அட்டை காண்பிக்கப்படும். அத்துடன் உங்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஹெல்த் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன்மூலம் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடையலாம்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link