SIP - Mutual Funds: 40 வயதில் கோடீஸ்வரராக... இந்த ஃபார்முலாவை கடைபிடிங்க போதும்
SIP என்னும் பரஸ்பர நிதியம்: சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால், கோடீஸ்வரராவது பெரிய விஷயமல்ல. கோடீஸ்வரர் ஆக, நல்ல வருமானம் பெறும் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், SIP என்னும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான நீண்ட கால சராசரி வருமானம் சுமார் 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால், இந்தியாவில் பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியத்தில் (SIP) முதலீடு செய்ய விரும்புகிறார்கள்
12-15-20 என்ற பார்முலா : முதலீட்டை திட்டமிட்டு முதலீடு செய்தால், 15 வருடங்களில் கோடீஸ்வரன் ஆகலாம். 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், 40 வயதில் உங்கள் கையில், ஒரு கோடி இருக்கும். கோடீஸ்வரராக மாற 12-15-20 என்ற சூத்திரம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
முதலீட்டிற்கான ஃபார்முலாவில், 12 என்றால் 12% வருமானம், 15 என்றால் 15 ஆண்டுகளுக்கான முதலீடு மற்றும் 20 என்றால் மாதம் ரூ.20,000 முதலீடு. 25 வயதில் 20,000 ரூபாய்க்கு SIP ஐ ஆரம்பித்து 15 வருடங்கள் தொடர்ந்து இந்த SIP இல் 12 சதவிகித வருமானம் கிடைத்தால் 40 வயதில் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்.
எஸ்ஐபி மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 மியூச்சுவல் ஃபண்டுகளில் டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.36,00,000 முதலீடு செய்வீர்கள். SIP முதலீடு கூட்டு வட்டி பலனை வழங்குகிறது. எனவே நீண்ட கால முதலீட்டில் மிகப் பெரிய அளவில் நிதியை (Investment Tips) உருவாக்க முடியும்.
SIP முதலீடுகளுக்கு 12 சதவீத வட்டி கிடைக்கும் என கணக்கில் கொண்டால், அதற்கான வட்டி, ரூ.64,91,520 என்ற அளவில் இருக்கும். இந்த வழியில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் மொத்தம் ரூ.1,00,91,520 இருக்கும். .
SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் 12 சதவீதத்திற்கு மேல் வருமானம் பெற்றால், உங்கள் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு 15 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று கொண்டால், ரூ.36,00,000 முதலீட்டில் வட்டியாக மட்டுமே, ரூ.99,37,262 கிடைக்கும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,35,37,262 கிடைக்கு
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எளிமையானது மட்டுமல்ல, அபரிமிதமான வருமானத்தையும் தருகிறது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற 20 வயதிலேயே முதலீட்டை தொடங்கினால் அதனை அடைவது மிக எளிது.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.