SIP: பரஸ்பர நிதிய முதலீடு... ரூ.30,000 சம்பளத்திலும் கோடீஸ்வரர் ஆகலாம்...!!
இன்றைய காலகட்டத்தில், நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். பரஸ்பர நிதியம் என்னும் ம்யுசுவல் பண்ட் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
மாத சம்பளமாக ரூ.25 முதல் ரூ.30,000 பெறுகின்ற நபர்களிடம் கோடீஸ்வரர்கள் ஆவதைப் பற்றி சொன்னால், அவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் நிதி திட்டமிடல் சரியான திசையில் செய்யப்பட்டால், இன்றைய காலகட்டத்தில் கோடீஸ்வரர் ஆவது அவ்வளவு கடினம் அல்ல.
குறைவான சம்பளம் வாங்குபவர்கள் கூட கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கக்கூடிய பல முதலீட்டு வழிகள் உள்ளன. SIP மூலம் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கும் நபரை எப்படி கோடீஸ்வரராக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
மியூச்சுவல் ஃபண்டுகள் எஸ்ஐபி என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். எனவே இதில் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், நேரடியாக பங்குகளில் பணத்தை முதலீடு செய்வதை விட ரிஸ்க் குறைவு.
நீண்ட காலத்திற்கு பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் சராசரி வருமானம் சுமார் 12 சதவிகிதம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இது மற்ற முதலீட்டு திட்டங்களை விட மிக அதிகம்.
சில சமயங்களில் இதை விட நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுத்தொகை காரணமாக, பரஸ்பர நிதிகளில் பணம் பன்மடங்காக பெருகும். எனவே, இன்று மக்கள் இதை ஒரு இலாபகரமான ஒப்பந்தமாகக் கருதுகின்றனர்.
ரூ.30,000 ரூபாய் சம்பளம் பெறுபவர் வருமானத்தில் 20 சதவீதத்தை SIP இல் முதலீடு செய்ய வேண்டும். எஸ்ஐபியில் மாதந்தோறும் ரூ.6,000 முதலீடு செய்தால், 24 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.
நீங்கள் 24 ஆண்டுகளில் மொத்தம் ரூ.17,28,000 முதலீடு செய்வீர்கள். இதற்கு 12 சதவீதம் வருமானமாக ரூ.83,08,123 கிடைக்கும். எனவே, 24 ஆண்டுகளில் உங்களிடம் ரூ.1,00,36,123 இருக்கும். அதில் உங்கள் முதலீட்டை அதிகரித்தால் 24 ஆண்டுகளுக்கு முன்பே கோடீஸ்வரராகலாம்.