புதிய மொபைல் வாங்குவது எப்படி? கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Fri, 24 May 2024-4:05 pm,

மிட்ரேஞ்ச் போன்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். Google Pixel 8 Pro ஸ்மார்ட்போன் சிறந்த ஜூம் கேமரா கொண்டுள்ளது. அதேபோல் Pixel 8 முக்கியமான ஸ்பெக்களை மிகச் அதற்கேற்ற விலையில் கொண்டுள்ளது. அதனால், தேவையை உணர்ந்து ஆராய்ந்து நல்ல மொபைல்களை வாங்கவும்.

 

சேல்ஸ் பார்க்கவும்: முக்கிய விடுமுறை காலங்களில், குறிப்பாக Amazon Prime Day மற்றும் பிளிப்கார்டில் பெரிய தள்ளுபடிகளை பார்க்கவும். அதில் அதிகம் வாங்கும் மொபைல்களுக்கு கொடுக்கப்படும் ரிவ்யூக்கள் உங்களுக்கு உகந்த ஐடியாவை கொடுக்கும். மேலும், இதுபோன்ற தள்ளுபடி விற்பனையில் குறைவான விலையிலும் மொபைல்களை வாங்கலாம். கடந்த ஆண்டு வெளியான மொபைல்களுக்கு இந்த ஆண்டு விற்பனையில் கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும். எனவே அதனை மிஸ் செய்ய வேண்டாம்.

 

ஸ்மார்ட்போன் செயல்திறன் vs. பட்ஜெட்: போன் வாங்கும்போது உங்களுக்கான பட்ஜெட் என்ன என்பதை தீர்மானித்தால் மட்டுமே அதற்கேற்ற விலையில் இருக்கும் மொபைல்களை தேர்வு செய்ய முடியும். விலைக்கு ஏற்ற ஸ்பெஷிபிகேசன்கள் எப்போதும் இருக்கும். அதனால், உங்களுக்கான விலையில் நல்ல மொபைல் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மொபைல்கள் எல்லோருக்கும் தேவையில்லை. அவரவர் பயன்பாட்டுக்கு ஏற்ற மொபைலை வாங்கினாலே போதுமானது. வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் மல்டிபிள் லென்ஸ் கொண்ட கேமரா போன்ற அம்சங்கள், தற்போது மிட்ரேஞ்ச் போன்களில் பொதுவானவை என்பதால், இந்த போன்களை தேர்வு செய்வது நல்லது.

 

5G என்பது உங்களுக்கு மிக வேகமான மொபைல் டேட்டா வேகங்களை கொடுக்கும். 5G கவரேஜ் பரவலாக இருப்பதால், 2024 இல் நீங்கள் 5G போன் வாங்குவது சிறந்தது. ஏனென்றால் எல்லா நெட்வொர்குகளும் 5ஜியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. 

கேமரா அம்சங்கள் லேட்டஸ்ட் போன்களில் முக்கியமாக கவனிக்கப் படுகின்றன, அதனால் பிக்சல்கள் அல்லது கேமரா லென்ஸ்களின் அளவு போன்றவை அதிகமாக இருக்கின்றன. மூன்று பின்னணி கேமரா இப்போது பொதுவானவை - ஒரு சாதாரண லென்ஸ், ஒரு அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் -  கேமரா உள்ளன.

தொகைக்கு ஏற்ற லென்ஸூகளே மொபைலில் இருக்கும். அதிக தொகை கொடுத்து எடுத்தால் ஷேடோ மோட், ஒப்டிக்கல் ஜூம், ஒப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்கள் இருக்கும். உங்கள் போனின் புகைப்பட திறனை கவனிக்க வேண்டும் என்றால், மறுபடியும், கேமரா செயல்திறனை மதிப்பீடு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்த விலையில் மொபைல் வாங்கினாலும் அதன் பேட்டரி திறன் பார்ப்பது அவசியம். பேட்டரி திறனைப் பொறுத்து மொபைல்களை வாங்குனீர்கள் என்றால் அது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஸ்டோரேஜ் பொறுத்தவரையில் அனைத்து போன்களும் குறைந்தது 64GB சேமிப்புடன் இருக்கும், அவற்றில் 10GB பிரி-இன்ஸ்டால்டு ஆப்ஸ் மற்றும் போன் இயங்குதளத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் வீடியோ பதிவு செய்ய திட்டமிடவில்லையெனில், 64GB போதுமானதாக இருக்கலாம்,. வீடியோ பதிவு என்றால் 128GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் அடிப்படையாக இருக்க வேண்டும்.

உயர் தர மாடல்களில் - குறிப்பாக உயர் தரமான 4K வீடியோ பதிவு செய்யக்கூடியவைகள் - 256GB அல்லது அதற்கு மேல் அளவுகளை வழங்குகின்றன. அதிக இடம் இருந்தால், பழைய கோப்புகளை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை.போன் மைக்ரோ எஸ்டி கார்டுகளை ஆதரிக்குமானால், அது வேறு விஷயம். மைக்ரோ எஸ்டி கார்டுகளை குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதனை உங்கள் போனில் வைத்து உங்களுக்குக் கிடைக்கும் சேமிப்பு அளவை அதிகரிக்க முடியும். ஆனால், விரிவாக்கக்கூடிய சேமிப்பு அம்சம் தற்போது போன்களில் மிகவும் அரிதானது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link