ஆன்லைன் மூலம் எஸ்பிஐ கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?
எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான www.onlinesbi.com என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும். இப்போது பெர்சனல் பேங்கிங் என்பதை டேப் செய்து உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்.
அதன் பிறகு இ-சேவைகள் என்பதை க்ளிக் செய்து 'சேமிப்பு கணக்கை மாற்று' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். மாற்ற வேண்டிய வங்கி கணக்கை தேர்வு செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் வங்கி கிளையின் கோடை தேர்ந்தெடுக்க வேண்டும்.
'கெட் பிரான்ச் கோட்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும், அதன் பின் கிளையின் கோட் தானாகவே அப்டேட் ஆகிவிடும். இப்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து அதனை ஏற்றுக்கொள்ள சமர்ப்பி என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது மொபைலுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும், அதன் பிறகு உங்களது கோரிக்கை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதற்கான அறிவிப்பு திரையில் காட்டப்படும்.