போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?

Wed, 11 Dec 2024-2:00 pm,

வங்கிகளைப் போலவே, வெவ்வேறு காலகட்டங்களுக்கான Fixed Deposit திட்டங்கள் தபால் நிலையங்களில் (Post Office) கிடைக்கின்றன. 5 வருட நிலையான இருப்பு தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன், வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறுவீர்கள். இந்த பிக்ச்டு டெபாசிட் திட்டத்தின் கீழ் உங்கள் பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.

வங்கியைப் போலவே, தபால் நிலையத்திலும் முதலீடு செய்யலாம். இதில், உங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. தபால் நிலையத்தில் இருக்கும் பல திட்டங்களில் ஒரு முக்கியமான திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

 

தபால் அலுவலகத்தில் உங்கள் பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, நீங்கள் 5 வருட FD-ஐ தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவுடன் 5 ஆண்டுகள் முதிர்ச்சி தேதி வரும் சமயத்தில் முன்கூட்டியே அந்த திட்டத்தில் தொடருவதற்கு நீட்டிப்பு செய்து கொள்ள வேண்டும். இரண்டு முறை அவ்வாறு நீங்கள் செய்ய வேண்டும். 

அதாவது 15 வருடங்கள் இந்த FD திட்டத்தில் இருக்க வேண்டும். அதன்படி, இந்த எஃப்டியில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளில் இந்தத் தொகைக்கு ரூ.4,49,948 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த தொகை ரூ.14,49,948 ஆக இருக்கும்.

 

ஆனால் இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், வட்டியாக மட்டும் ரூ.11,02,349 கிடைக்கும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களின் மொத்தத் தொகை ரூ.21,02,349. முதிர்ச்சியடைவதற்கு முன்பு நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நீட்டிக்க வேண்டும். 

அப்படிப்பட்ட நிலையில், 15வது ஆண்டில், 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வட்டியாக மட்டும், 20,48,297 ரூபாய் கிடைக்கும். முதிர்ச்சியின் போது, ரூ.30,48,297 பெறுவீர்கள். அதாவது, உங்கள் அசலை விட இரண்டு மடங்கு வட்டியும், உங்கள் தொகையை மூன்று மடங்காகவும் பெறுவீர்கள்.

தபால் அலுவலகத்தில் 1 வருட பிக்ச்டு டெபாசிட் திட்டத்தில், முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் வரை நீட்டிக்கப்படலாம். 2 வருட FD முதிர்வு காலத்தின் 12 மாதங்களுக்குள் நீட்டிக்கலாம்.

3 மற்றும் 5 வருட FD நீட்டிப்புக்கு, முதிர்வு காலத்தின் 18 மாதங்களுக்குள் அஞ்சல் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, போஸ்ட் ஆபிஸ் கணக்கைத் திறக்கும்போதே முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம் என தெரிவித்துவிடலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link