PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...
PF கணக்கில் செய்யப்படும் முதலீடு: நீங்கள் தனியார் துறையில் பணிபுரிந்தால், உங்கள் சம்பளத்தில் 12% உங்கள் PF கணக்கிற்கு செல்கிறது. உங்கள் நிறுவனமும் அதே தொகையை கணக்கில் போடுகிறது. ஆனால் இதில் 8.33% ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது., மீதமுள்ள 3.67% PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
EPFO ஓய்வூதிய விதிகள்: நீங்கள் PF கணக்கில் 10 வருடங்கள் பங்களித்திருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவராவீர்கள் என EPFO விதிகள் கூறுகின்றன. நீங்கள் 50 வயதில் ஓய்வூதியத்தைப் பெறலாம். ஆனால் குறைந்த வயஹ்டில் ஓய்வீதையம் பெற ஆரம்பித்டால், ஒவ்வொரு ஆண்டும் 4% பிடித்தம் செய்யப்படும். ஆனால், 58 வயது வரை காத்திருந்தால் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.
8% கூடுதல் ஓய்வூதியம்: 58 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஓய்வூதியத்தை கோராமல் 60 ஆண்டுகள் வரை ஒத்திவைத்தால், ஒவ்வொரு ஆண்டும் 4% அதிகம் கிடைக்கும், அதாவது 60 வயதில், உங்களுக்கு 8% கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதிய அதிகபட்ச வரம்பு: EPFO வகுத்துள்ள தற்போதைய விதிகளின்படி, ஓய்வூதியமாக பெறக்கூடிய சம்பளத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.15,000 ஆகும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 x 8.33/100 = ரூ 1,250 உங்கள் ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
ஓய்வூதியம் கணக்கீட்டு ஃபார்முலா: ஓய்வூதியம் கணக்கிடப்படும்போது, ஒரு குறிப்பிட்ட சூத்திரம் மூலம் பயன்படுத்தப்படுகிறது. 60 மாத சராசரி சம்பளம் X சேவை காலத்தை 70 ஆல் வகுப்பதன் மூலம் தற்போதைய ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. பணியாளரின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் சராசரி ஊதியம் கணக்கிடப்படுகிறது.
58 வயதில் கிடைக்கும் ஓய்வூதியம்: நீங்கள் 23 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து 58 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் மொத்தம் 35 ஆண்டுகள் சர்வீஸ் செய்திருப்பீர்கள். இந்த சூழ்நிலையில், சாராசரி அடிப்படை சம்பளம் = ரூ 15,000 சேவை காலம் = 35 ஆண்டுகள் என்ற அளவில் இருந்தால், மாதம் 15,000 x 35 / 70 = ரூ 7,500 ஓய்வூதியமாக கிடைக்கும்.
60 வயதில் கிடைக்கும் ஓய்வூதியம்: நீங்கள் 60 வயதில் ஓய்வூதியம் கோரினால், கூடுதலாக 8% உயர்வு இருக்கும். PF ஓய்வூதியத்தின் கணக்கீடு கடந்த 60 மாதங்களாக உங்களின் சராசரி சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது. சர்வீஸ் செய்த காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக உங்கள் ஓய்வூதியம் இருக்கும்.
நீண்ட காலமாக சர்வீஸ் செய்த நிலையில், 60 ஆண்டுகளாக ஓய்வூதியத்தை கோரவில்லை என்றால், இது உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும். ஓய்வூதியம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைப் பெற, கண்டிப்பாக EPFO விதிகளைப் புரிந்துகொண்டு, உங்கள் கணக்கை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்.