நடிகை சாய் பல்லவியின் நீளமான கூந்தலின் ரகசியம் `இந்த` இலைதானா?
நடிகை சாய் பல்லவி கிளாமர், லேட்டஸ்ட் ஃபேஷன் போன்றவற்றை பின்பற்றுவதில்லை. அவரது ஃபேஷன் சென்ஸ் மிகவும் வித்தியாசமானதாகும். இதற்கு தான் இவர் குறிப்பாக புகழ் பெற்றார். மேக்கப் அணிவது, கிளாமர் உடை அணிவது இவற்றை தள்ளி வைத்து தனக்கு பிடித்தபடி தன்னை அழகு படுத்தி கொள்வார்.
சாய் பல்லவி தனது நடிப்பைத் தவிர, தனது நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கும் பெயர் பெற்றவர். இடுப்பளவு முடியை வளர்த்திருக்கும் சாய் பல்லவி, சில இயற்கை பொருட்களின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டவர்.
இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் பிரச்சனையை பலரையும் வாட்டி வதைக்கின்றது. அனைத்து வயதினரும் இந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால் முடியை சரியாக கவனித்துக்கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுப்படலாம்.
கூந்தல் நீளமாக வளர வேண்டுமெனில், வாரத்திற்கு மூன்று முறையாவது எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் இது கூந்தலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தலாம். முடி வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ள இயற்கை முறையாகும். மேலும் இந்த எண்ணெய் தடவி, சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு கழுவவும்.
நடிகை சாய் பல்லவி கூந்தல் ரகசியத்தை பற்றி பேசுகையில், அவர் தனது கூந்தலுக்கு கற்றாழையை பயன்படுத்துவாராம். கூந்தலின் உற்ற நண்பன் கற்றாழை தான். தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டும் என்று தனது நீண்ட கூந்தலின் ரகசியத்தை கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.