தீபாவளிக்கு நீங்கள் வாங்கும் கோல்ட் காயின் போலியானதா... இந்த செயலியில் ஈஸியாக பார்க்கலாம்!
ஆண்ட்ராய்ட் போன்களில் PlayStore மற்றும் iPhone மொபைல்களில் App Store இல் இருந்து Umang செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
முதலில், நீங்கள் செயலியில் பதிவு (Register) செய்ய வேண்டும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்துபவராக இருந்தால் உள்நுழைய (Login) வேண்டும். இதைச் செய்ய, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Register/Login' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது, Register/Login பக்கத்தில், புதிய பயனராகப் பதிவுசெய்ய, 'Register Here' என்பதைத் தட்டவும் அல்லது உள்நுழைய உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும். பதிவு செய்ய அல்லது உள்நுழைய, முதலில் உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். அதைச் செய்ய, உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து OTP பெறவும். பின்னர், அதை உள்ளீடு செய்து செயலியில் தொடரவும்.
நீங்கள் பதிவுசெய்து, உமாங் செயலியில் நுழைந்தவுடன், UMANG செயிலியில் Search In Umang என்ற இருக்கும் தேடுதல் பொறியை கிளிக்க செய்ய வேண்டும்.
இப்போது, அந்த தேடுதல் பொறியில் 'Verify HUID' என டைப் செய்து, BIS Care மூலம் கிடைக்கும் முதல் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, HUID எண் என கேட்கப்படும் இடத்தில் தங்க நாணயம்/தங்கப் பொருளில் ஹால்மார்க் எண் அல்லது HUID எண்ணை சரியாக உள்ளீடு செய்து Verify என்பதைத் தட்டவும்.
நீங்கள் Verify என்பதைத் தட்டியதும், உங்கள் தங்கம் உண்மையானது என்றால், நகைக்கடைப் பதிவு எண் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் விவரங்கள் மொபைலில் தெரியும். அதில் தூய்மை விவரங்கள், ஹால்மார்க்கிங் தேதி, கடையின் பெயர் மற்றும் பிற விவரங்களையும் காண்பிக்கும். தங்கம் போலியானது என்றால் அது இந்த விவரங்களைக் காட்டாது. @bis.gov.in. என்பதற்கு இமெயில் மூலம் நீங்கள் போலி தங்கம் குறித்து புகார் அளிக்கலாம்.