மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!

Sun, 21 Apr 2024-3:53 pm,

ஹெல்தியான முறையில் வெயிட் லாஸ் செய்வதற்கு எந்த உணவையும் சாப்பிட்டால் மட்டும் பத்தாது. அதற்கு, உடற்பயிற்சியுடன் சேர்த்து, டயட் இருக்க வேண்டியது அவசியம். ஃபைபர் சத்துகளும், உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் உணவுகளையும் சாப்பிட வேண்டியதும் அவசியம். இவை, உடல் எடையை குறைக்க உதவும். என்னென்ன உணவுகள் தெரியுமா?

அவகாடோ:

2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், உடற்பயிற்சியுடன் சேர்த்து அவகேடோவை சாப்பிட்டவர்கள் ஒரு நாளைக்கு பல கலோரிகளை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் பெயர், எல்டிஎல் கொலஸ்ட்ரால். இதை குறைக்க அவகாடோவை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

முட்டை:

முட்டையில் நல்ல புரத சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், இதனை தினசரி தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவாக மட்டுமன்றி காலை உணவாக கூட எடுத்துக்கொள்ளலாம். 

ஆப்பிள்:

"One apple a day keeps the doctor away" என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். இதற்கு அர்த்தம் “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரின் உதவியே வேண்டாம்” என்பதுதான். இதில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருக்கின்றன.  ஆப்பிளை, கலோரி இழக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதனை சாலட், டோஸ்ட் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். 

முழு தானியங்கள்:

முழு தானியங்களில் வைட்டமின், புரதம் மற்றும் மினரல் சத்துகள் ஆகியவை இருப்பதாக சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவைகளை குயினாவோ, பிரெட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். 

ஃபேட்டி ஃபிஷ்:

உடல் எடையை குறைக்க டிப்ஸ் கொடுக்கும் மருத்துவர்கள், வாரா வாரம் தங்களது டயட்டில் கடல் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. இவை, பிற உணவுகளை விட கொஞ்சம் விலை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 

சியா விதைகள்:

சியா விதைகள், உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளுள் ஒன்று. இவை, கொஞ்சமாக சாப்பிட்டாலும் முழுமையாக சாப்பிட்ட உணர்வை அளிக்கின்றன. 2 தேக்கரண்டி சியா விதைகளை தினமும் எடுத்துக்கொள்வதால், உடலுக்கும் நன்மை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link