ஸ்மார்ட்போன் எப்போதும் ஹேங் ஆகாமல்... வேகமாக வேலை செய்ய... சில டிப்ஸ்

Sun, 27 Oct 2024-10:37 pm,

வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறிப்போன ஸ்மார்ட்போன், உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றின் வரிசையில், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர, தொடர்ந்து புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஸ்மார்ட்போன்கள், அதன் தரம் மற்றும் மாடலுக்கு ஏற்ப, 2 முதல் 5 ஆண்டுகள் என்ற கால அளவில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் ஸ்டோரேஜ் பற்றாக்குறை. இதனால் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங் ஆகி, செயக்ல்திறன் குறைந்த, அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

ஸ்மார்ட்போனை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்க, சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், ஸ்மார்ட் போனை  சிறப்பாக பராமரித்து வந்தால், உங்கள் போன் ஹேங் ஆகாமல் நன்றாக வேலை செய்யும்.

 

உங்கள் போன் நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளை அவ்வப்போது உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்வது அவசியம். இது போனின் ரேம் மற்றும் சேமிப்பக திறனை மேம்படுத்துகிறது. 

நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவதால், தொலைபேசி முன்னே விட வேகமாக இயங்கும். ரேம் மற்றும் சேமிப்பகத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

போனில் சேமிக்கப்பட்டுள்ள, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை அவ்வப்போது தனியாக, ஹார்ட் டிஸ்குகளில் சேமித்து, போனில் அழித்து விடுவதன் மூலம், போனில் உள்ள சேமிப்பகத்தை காலியாக வைத்துக் கொள்ளலாம். இதனால், போன் ஹேங் ஆகாமல் சிறப்பாக வேலை செய்யும்.

ஸ்மார்ட்ஃபோனை, மின்னணு பொருட்கள், எலக்ட்ரானிக் மற்றும் காந்த புலன்களுடன் அதிக அளவில் தொடர்பு கொள்ளாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.. எலக்ட்ரானிக் மற்றும் காந்த புலன்கள் சாதனத்தை உள்ளிலிருந்து சேதப்படுத்தக் கூடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். இதனால் போனின் பேட்டரி சேதம் அடைவதோடு, ஸ்மார்ட் போனின் செயல் திறனும் பாதிக்கப்படும். 100% சார்ஜ் செய்வது சரியல்ல. 

ஸ்மார்ட்போனை 80 சதவீதம் அல்லது 90 சதவீதம் சார்ஜ் ஆனவுடன் எடுத்து விட வேண்டும். அதேபோல போன் பேட்டரி சார்ஜ் 20 % என்ற அளவிற்கு கீழே போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link