குழந்தைகளை சரளமாக ஆங்கிலம் பேச வைப்பது எப்படி? எளிமையான டிப்ஸ் இதோ!
‘இளமையில் கல்’ என்று ஆத்திச்சூடியிலேயே கூறியிருகிறார், ஔவையார். இது, மிகவும் உண்மையான கூற்று என பல்வேரு அறிஞர்களும் தெரிவிப்பதுண்டு. எதை படிக்க வேண்டுமென்றாலும், கற்றுக்கொடுக்க வேண்டுமானாலும் அதை இளமை பருவத்திலேயே செய்து விட வேண்டும். அப்படி, ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதென்றாலும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வகையில் கற்றுத்தரலாம். இப்போதுள்ள பல்வேறு பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. எனவே, குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச எப்படி கற்றுக்கொடுப்பது? இதோ டிப்ஸ்
குழந்தைகளுக்கு கையில் புத்தகத்தை கொடுத்து படி என்றால், ஒரு சிலவற்றை படிப்பர், ஒரு சில விஷயங்களை படிக்க மாட்டர். எனவே, அவர்களின் படைப்பாற்றலை தூண்டும் வகையில் ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு செய்தி வாசிப்பாளராக மாறி ஏதேனும் செய்தியை கூற சொல்வது, அவர்கள் உருவாக்கிய கதையை ஆங்கிலத்திலேயே பேச சொல்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.
குழந்தைகளுக்கான கதை/வாசிப்பு புத்தகங்களை வாங்கி கொடுத்து அவர்களை படிக்க சொல்லலாம். ஆரம்பத்தில் நீங்கள் அவர்களுக்கு வாசித்து காண்பித்து பின்பு அதை அவர்களுக்கு படிக்க சொல்லிக்கொடுக்கலாம்.
ஆங்கிலம் பேசுவதற்கு அல்லது கற்றுக்கொடுப்பதற்கு என தனியாக ஒரு நேரத்தை ஒதுக்குவது நல்லது. இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுப்பது மட்டுமன்றி அவர்களுடன் நன்றாக நேரமும் செலவிடலாம்.
குழந்தைகளுக்கு ஆங்கிலம் நன்றாக படிக்கவும் எழுதவும் தெரிந்து கொள்ள, அவர்களை தினமும் இரவில் ஜர்னல் எழுத சொல்லலாம். இந்த பழக்கம் அவர்கள் வளர்ந்த பின்பும் நல்ல பழக்கமாக அவர்களிடமே ஒட்டிக்கொள்ளும்.
உங்கள் குழந்தைக்கு பிடித்த டாப்பிக் எதையேனும் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அது குறித்து நன்றாக கலந்துரையாடலாம். இதனால், அவர்களுக்கு ஆங்கில ஆர்வம் அதிகரிப்பதோடு, அவர்கள் தனக்கு பிடித்தது என எதை நினைத்து பேசுகிறார்களோ அதன் மீதுள்ள ஆர்வமும் அதிகமாகும்.
இசை, பலவகையான மேஜிக்கை செய்யக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு பாடல்கள் மூலமாகவும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கலாம். ஆயிரக்கணக்கான ஆங்கில ரைம்ஸ் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது, இதை பாடிக்காண்பித்து அதற்கான அர்த்தத்தையும் சொல்லித்தரலாம்.