மஞ்சள் மஞ்சளாய் இருக்கும் பற்களை வெள்ளை வெளீராக மாற்றலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
மஞ்சள் பற்களை வெள்ளையாக்க, இயற்கயான டிப்ஸ் இருக்கிறது. அதை இங்கு பார்ப்போம்.
பேக்கிங் சோடா:
பற்களை இயற்கையாக வெள்ளையாக்க, பேக்கிங் சோடா உதவுவதாக கூறப்படுகிறது. பற்களில் நிரந்தரமாக தேங்கியிருக்கும் மஞ்சள் கரையை அகற்ற, இது உதவுமாம். வாரத்தில் இரு முறை, இதை வைத்து பல் தேய்க்கலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர்.
ஆயில் புல்லிங்:
ஆயில் புல்லிங் முறையை பல ஆண்டுகளாக மக்கள் உபயோகித்து வருகின்றானர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு சில ஆராய்ச்சி கட்டுரைகளில் இது பற்களை வென்மையாக்க உபயோகிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தேங்காய் எண்ணெயை வாயில் போட்டு 5 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம்.
காய்கறி மற்றும் பழங்கள்:
சாப்பிடுவதற்கு கருக்கு முருக்கு என இருக்கும் காய்கறிகளை சாப்பிடலாம். இதனால் ஈறுகளும் வலுவாகும்.
ஆப்பிள் சைடர் வினீகர்:
ஆப்பிள் சைடர் வினீகர், பல்வேறு உடல் நலக்கோளாறுகளை சரி செய்ய உதவும். ஆனால், ஈறுகளை பாதிப்படைய வைக்காமல் உபயோகிக்க வேண்டும்.
ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு தோல்களை வைத்து பற்களை சுத்தம் செய்யலாம். தினமும் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இதை வைத்து பல் துலக்கினால் கண்டிப்பாக பற்களை வெள்ளையாக்கலாம் என கூறப்படுகிறது. இதை செய்த பிறகு கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
நாக்கை சுத்தம் செய்தல்:
பற்கள் வென்மை ஆகாமல் இருப்பதற்கு நாக்கு சுத்தமில்லாமல் இருப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. எனவே, பற்கள் வெள்ளையாக Tongue Cleaner-ஐ வைத்து சுத்தம் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)