செம டென்ஷனாவே இருக்கீங்களா? ரிலாக்ஷாக ஜப்பானியர்கள் சொல்வதை கேளுங்கள்
இன்றைய பிஸியான வாழ்க்கையில், மன அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் எதிர்கொள்கிறார்கள்.
நீண்ட காலமாக இதைப் புறக்கணிப்பது மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் இந்த சவாலை சமாளிக்க சிறந்த ஜப்பானிய வழிமுறை ஒன்றை இன்று கற்றுக்கொள்ளுங்கள்
உலக முழுக்க அதிக நாட்கள் வாழ்பவர்கள் என்ற வரிசையில், அதிக சராசரி வயது உடைய நாட்டினர் என்பதில் முன்னணியில் இருப்பது ஜப்பானியர்களே தவிர இந்தியர்கள் அல்ல.
ஜப்பானில் ஒரு மனிதனின் சராசரி வயது 81 என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பெண்களின் சராசரி வயது தோராயமாக 87 ஆண்டுகள். தற்போது ஜப்பானின் சராசரி ஆயுட்காலம் 84.67 ஆண்டுகள்.
ஜப்பான் மக்கள் அதிக காலம் வாழ்கிறார்கள் என்பதும், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மட்டுமே இதற்குக் காரணம் என்பதும் ஆய்வு மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஜப்பான் மக்கள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஜப்பானியர்கள் வெளியில் சாப்பிட விரும்ப மாட்டார்கள், அவர்களின் முழு உணவுத் திட்டமும் வீட்டில் சமைத்த உணவைச் சுற்றியே உள்ளது.
சுஷி, கடல் மீன் மற்றும் முழு தானியங்கள் ஜப்பானியர்களின் உணவில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆராய்ச்சிகள் தேநீர் தீங்கு விளைவிப்பதாகக் காட்டினாலும், ஜப்பானியர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க தேநீர் அருந்துகிறார்கள்.
ஜப்பானில் மட்சா தேநீர் மருந்தாக உட்கொள்ளப்படுகிறது. இந்த தேநீர் மற்றும் பிற உணவுத் திட்டங்கள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சஞ்சீவியாக இருக்கிறது.
அதனால் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என விரும்புபவர்கள், அரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுங்கள். வீட்டில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடுங்கள். கடை உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டாயம் தவிர்த்துவிடுவது நல்லது.