1 வருடத்தில் உங்கள் கனவு வாழ்க்கையை அடைவது எப்படி? ஈசியான 8 வழிகள்!
உங்கள் வாழ்க்கையில், எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை தெளிவாக கனவுகாண வேண்டும். எந்த வகையான உறவுகள் வேண்டும், எந்த வகையான வாழ்க்கைமுறை வேண்டும் போன்றவற்றை தெளிவாக தேர்ந்தெடுத்து அவற்றை நினைத்துப்பார்க்க வேண்டும்.
உங்களால் அடைய முடியும் இலக்குகளை நிர்ணயிக்கவும். ஒரு நாளில், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் உங்களால் என்னென்ன இலக்குகளை அடைய முடியும் என நினைக்கிறீர்களோ, அந்த இலக்குகளை வைக்கலாம்.
நமக்குள் நாம், தினமும் பாசிடிவான விஷயங்களை பேசிக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் அல்லது உறங்க செல்வதற்கு முன்பு “எனக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். எனக்கான வாய்ப்பு என் கைகளில் வந்து சேரும்” போன்ற நல்ல வார்த்தைகளை பேசவும்.
வாழ்வில் இதுவரை கிடைத்திருக்கும் விஷயங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பது அவசியம். இது, எந்த சவால் உங்களை நோக்கி வந்தாலும் அதை நீங்கள் எதிர்கொள்ள உதவும்.
கனவு வாழ்க்கை இருக்கிறது என்றால், அதற்கேற்ற முயற்சிகளையும் நீங்கள் செய்வது மிகவும் அவசியம். நீங்கள் எடுக்கும் முயற்சி பெரியதோ, சிறியதோ அதை தினமும் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
உங்களை சுற்றி இருப்பவர்கள், உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவும், நீங்கள் எடுக்கும் முயற்சிகளை பார்த்து பெருமை கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி யாரும் இல்லை என்றால், உங்களுக்கு நீங்களே பெரும் ஆதரவாளராக இருக்க வேண்டும்.
“நாம் இதற்கு தகுதியான ஆள்தானா?” என்ற கேள்வி நமக்குள் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். அப்படி நமக்குள் ஒரு குரல் எழும் போது “ஆம், நான் அதற்கு தகுதியான ஆள்தான்” என உங்களுக்குள்ளேயே நீங்கள் சொல்லிக்கொள்வது அவசியம். உங்களுக்குள் இருக்கும் இந்த சந்தேகங்களை தூக்கி எறிவதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது, அதை கொண்டாடலாம். ஆனால், முயற்சியை ஒரு போதும் கைவிட்டுவிட கூடாது. பொறுமையை கடைப்பிடித்தால், இந்த உலகமே உங்களுக்கு சொந்தமாகும்.