மொபைல் போனில் சார்ஜர் அதிக நேரம் இருக்க நல்ல டிப்ஸ்!
இது எல்லாமே ஆன்ல இருந்தால் charger சீக்கிரம் கம்மி ஆயிடும்.முக்கியமாக லொகேஷன் (Location) எப்போதும் ஆனில் இருந்தால், மொபைல் போனில் இருக்கும் சார்ஜ் சீக்கிரம் குறைந்து விடும். தேவைப்படும் நேரத்தில் மட்டும் லொகேஷனை ஆன் செய்து கொள்ளுங்கள். தேவையற்ற நேரத்தில் ஆஃப் செய்வது உங்களின் மொபைல் போன் பேட்டரியைப் பாதுகாக்கலாம்.
உங்களின் மொபைல் போன் வைப்ரேட்டில் இருந்தால் இனி அந்த தவறை செய்யாதீர்கள், பேட்டரி பலவீனமாக இதும் ஒரு காரணம் ஆகும். தேவையற்ற நேரத்தில் இதை தவிர்ப்பது நல்லதாகும்.
அதிகமானோர் செய்யும் தவறு இது. ஒரு நாள் முழுவதும் மொபைல் போனிற்கு சார்ஜர் போடுவது, மீண்டும் இரவு தூங்கும்போது சார்ஜர் போட்டுவிட்டுத் தூங்குவது. இந்த தவறால் உங்களுடைய மொபைல் போன் விரைவில் பலவீனம் ஆகி பிறகு சார்ஜர் போட்டாலும் சார்ஜ் நிற்காது. தூங்கும்போது சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிட்டு பின் அதிக நேரம் கழித்து எடுப்பது இது போன்ற தவறை இனி செய்யாதீர்கள்.
மொபைல் போனில் சார்ஜர் குறைந்தபட்சம் 20 சதவீதம் இருந்தால் சார்ஜர் போட வேண்டும்,அதிகபட்சம் 90 சதவீதம் வரை சார்ஜர் போடவேண்டும். சார்ஜர் குறையும் வரை பயன்படுத்தி பின் காலியான பிறகு சார்ஜர் போட்டால் பேட்டரி வீக் ஆகிவிடும்.
உங்கள் மொபைல் போன் எந்த பெயரில் உள்ளதோ அதற்குரிய சார்ஜர் பயன்படுத்துவது மொபைல் போன் பேட்டரிக்கு நல்லது.மொபைல் போன் தொடர்புடைய சார்ஜரை பயன்படுத்தாமல் வேறு சார்ஜரை பயன்படுத்திவந்தால் பேட்டரி எளிதில் பலவீனம் அடையும்.
தேவையற்ற செயலியை மொபைல் போனில் வைத்திருப்பது சர்ஜர் சீக்கிரம் குறையும் வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கும். அதிக செயலி நம்முடைய மொபைல் போனின் தகுதிக்கு மேல் இருந்தால் அது தானாக அதற்குத் தேவையான சார்ஜர் மற்றும் நெட்டை இழுத்துக்கொள்ளும்.
சார்ஜர் சேமிக்க வேண்டும் என்று பவர் சேவிங் தினமும் ஆன் செய்து வரும் மக்கள் தற்போது அதிகம் உள்ளனர். பவர் சேவிங் தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதைத் தினமும் பயன்படுத்தி வருகிறீர்கள்.மேலும் சார்ஜர் சேமிப்பதற்காகத் தேவையற்ற பேட்டரி சேவர் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்து வருகின்றீர்கள். இனி இதுபோன்ற தவறை செய்யாதீர்கள்.
அதிகமான வெளிச்சம் அதாவது ப்ரைட்னஸ் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள், அடிக்கடி அப்டேட் செய்வதை தவறாமல் கடைப்பிடியுங்கள். மொபைல் போனை அப்டேட் செய்வதால் உங்களுடைய மொபைல் போன் புதுப்புது மாற்றங்களைப் பதிவிறக்கம் செய்யும் மேலும் பேட்டரி தன்மையை உறுதிப்படுத்த உதவும் எனக் கூறுகின்றனர்.