குற்ற உணர்ச்சியில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை கூட சுட்டிக்காட்டி நீ எந்தளவிற்கு தப்பானவன் அல்லது தப்பு செய்தவள் எனத் தெரியுமா ? என்பதை அடிக்கடி நினைவூட்டும் சமூகமாக மாறிவிட்டோம். இது ஒரு பொதுவான பிரச்னை. ஏனென்றால் இவ்வுலகில் நல்லவனாக வாழ்வது கடினம்.
யாராலும் வாழ்க்கை முழுவதும் பிறப்பு இருந்து இறப்பு வரை நல்லவனாக வாழ முடியாது. நல்லவனாக வாழ்க்கை விட நல்லவன் போல் நடிப்பது மிகவும் கடினமான காரியம். இது ஒரு உள்ளுணர்வு... மனிதனுக்கு இதைப் பற்றி சொல்லிக் கொடுத்து புரிய வைக்க வேண்டிய விஷயமல்ல.
ஒவ்வொரு நபருக்கும் தான் நல்லவனா ? கெட்டவனா என உள்ளுணர்வு சொல்லும். இதில் மூன்று விஷயங்கள் உள்ளன. யார் எப்படி போனால் என்ன நாம் நமக்கு பிடித்தது போல் வாழ்வது, தன்னை சுற்றி மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை மட்டும் விரும்புவது, யாரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது என சில விஷயங்களை நம் மூளையில் ஏற்றிவிட்டோம். இதில் சமநிலை எட்டுவதற்கு காலம் எடுக்கும்.
தவறு செய்யும் மனிதர்களை நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகமும் இழிவாக பார்க்கிறது. நல்லது செய்தால் மட்டுமே ஒருவரை பாராட்ட வேண்டுமா ? பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் வாழ்வதையும் பாராட்டலாம்.
இந்த உலகம் நீ நல்லது செய்தால் பாராட்ட போகிறதா ? கெட்டது செய்தால் குற்றம் சுமத்தி திட்டி தீர்க்கும்... எப்படியாக இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. இதனால் எனக்குப் பிரச்னை இல்லை; கெட்ட பெயர் கிடைத்தாலும் பரவாயில்லை என குற்றங்கள் செய்ய ஆரம்பிப்பது தான் குற்ற உணர்வுக்கு வழிவகுக்கும்.
நாம் இந்த உலகில் அனைத்து நேரங்களிலும் நல்லவனாக இருக்க முடியாது. முடிந்தளவிற்கு நல்லவனாக வாழ முயற்சிக்கலாம். தவறுகளை திருத்திக் கொண்டால் குற்ற உணர்ச்சி குறையும். குற்ற உணர்ச்சி இல்லாத போது மட்டுமே அமைதியான மன நிலையில் வாழ முடியும்.
பெரும்பாலான தவறுகளுக்கு அறியாமையும், ஆசையுமே காரணம். இதனால் நம் மீதே நமக்கு கோபம் வரும். தவறுகள் செய்வதை தடுத்தால் குற்ற உணர்வில் இருந்து மீள முடியும்.
அதே போல பிறர் குற்றம் செய்தாலும் அவர்களுக்கும் குற்ற உணர்வு ஏற்படும். அதை கடக்க முயற்சிக்கும் போது பொறுமை காக்க வேண்டும். இதனால் வெறுப்பு குறையும். குற்ற உணர்வில் இருந்து மீள நேரம் எடுக்கும்.
ஒவ்வொரு முறையும் எதை செய்யக்கூடாது என ஒவ்வொரு விழுக்காடாக குறைத்தால் குற்ற உணர்வில் இருந்து மீண்டும் உலகத்தை சொர்க்கமாக கருதி மகிழ்ச்சியாக வாழ முடியும். முக்கியமாக கொஞ்ச நேரம் நல்லவனாக இருந்தாலும் நான் நல்லவன் தான் என நினைக்க ஆரம்பிக்கவும்.