பயங்கர சண்டையிலும் பொறுமையாக இருப்பது எப்படி? டிப்ஸ் இதோ!
யாரோ ஒரு வெளிநபருடன் மட்டுமல்ல, நம்முடனேயே இருக்கும் பலரிடம் கூட பல சமயங்களில் நாம் அதிகமாக சண்டை போடும் நிலை ஏற்படலாம். இந்த சண்டைகள் பல சமயங்களில் பெரும் உறவு பிளவிற்கும் காரணமாக அமையும். இதை தவிர்க்க, சண்டைகளின் போது அமைதியை கடைப்பிடித்து அதை பொறுமையாக கையாள்வது மிகவும் முக்கியமாகும். இதை செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!
சண்டை வரும் சமயங்களில், உங்களை நோக்கி பெரும் வார்த்தைகள் வீசப்படும் போது அதை சமாளிக்க, உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இது உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்க உதவும்.
எந்த விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு எதிரில் இருக்கும் மனிதரையும் நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதனால் எந்த விவாதம் எழுந்தாலும் அதை வீண் சண்டையாக மாற்றாமல் இருங்கள். எதிரில் இருப்பவர் என்ன பேசுகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
எதிரில் இருக்கும் நபரிடம் பேசும் போது நீங்கள் பேசும் தொனி அவரை காயப்படுத்தும் வகையில் இருக்க கூடாது. குரலை உயர்த்தி பேசுவதையோ, அவரை பயமுறுத்தும் விதத்தில் பேசுவதையோ தவிர்க்கவும்.
சூடான விவாதத்தில் கோபத்தில் எந்த வார்த்தை பேசி இருந்தாலும், நீங்கள் பேசியது சரியா என ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேச வேண்டும். இது, அடுத்த முறை சண்டை வராமல் தடுக்கும்.
கோபமாக இருக்கும் போது எதிரில் இருக்கும் நபரை திட்டுவதை தவிர்க்கவும். இப்படி உங்கள் பொறுமையை இழப்பதை விட்டுவிட்டு, இந்த விவாதத்திற்கும் சண்டைக்கும் என்ன தீர்வு என்பதை யோசித்து பாருங்கள். நீங்கள் கோபமாக இருக்கும் போதுதான் மிகவும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
எந்த விவாதமாக இருந்தாலும், எந்த அளவிற்கான கோபமாக இருந்தாலும் அது வாய்ச்சண்டையாக மட்டுமே இருக்க வேண்டும். எதிராளியை அடிக்க கை ஓங்குவது, அல்லது அவர்களை மன ரீதியாக-உடல் ரீதியாக துன்புறுத்த நினைத்தால் உடனே ஒரு மனநல ஆலோசகரை பாருங்கள். உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது.