கண் பார்வை பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்? ஈசியான வழி!
மனிதனுக்கு மிக முக்கிய உணர்திறன்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது, கண் பார்வை. ஒரு நிமிடம் கண்கள் இருட்டில் தத்தளித்தால் கூட, நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றுமே புரியாது. எனவே, அப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கண்களை பராமரிப்பது எப்படி என்பது குறித்து, இங்கு பார்ப்போம்.
சன் கிளாஸ்:
கண்ணாடிகளை நாம் அழகு, ஸ்டைலிற்காக மட்டும் பயன்படுத்துகிறோம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் இவை நம் கண்களை பாதுகாக்கும் ஒரு கவசமாகவும் திகழ்கிறது. கண்ணாடிகளை தேர்ந்தெடுக்கையில் அதில் யுவிபி மற்றும் யுவிபி கதிர்களை தடுக்கும் சக்தி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
நிழல்:
வெளியில் செல்கையில், எப்போதும் உங்கள் முகத்தை, குறிப்பாக கண்களை வெயிலில் பெரிதாக காண்பிக்காமல் வைத்திருக்க வேண்டும். வெகு நேரம் வெயிலில் இல்லாமல், நிழலில் இருக்க வேண்டும்.
ஸ்கிரீன் டைம்:
மொபைல் போன், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் உங்கள் கண்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெகு நேரம் இப்படி செய்வதாலும் கண்களுக்கும் கண் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
நீர்ச்சத்து:
உடலில் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் நல்லதாகும். இது, ஒட்டுமொத்த உடல் நலனை பாதுகாப்பது மட்டுமன்றி, கண்களையும் இது பாதுகாக்கிறது. எனவே, நிறைய பழச்சாறுகள் மற்றும் இயற்கை பானங்களை குடிக்கலாம்.
கண் பார்வைக்கான ஆய்வு:
கண் மருத்துவரிடம் சென்று உங்கள் கண்களில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
உலர்ந்து போன கண்கள்:
கடுமையான காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாக, கண்கள் உலர்ந்து போகலாம் (dry eyes). இது கண் நோய்க்கும் வழிவகுக்கும். எனவே, இதை தடுக்க இதற்கேற்ற கண் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைக்கு பின்னர் உபயோகிக்கலாம்.
டயட்:
ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, டயட் இருப்பது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது. எனினும், கண் பார்வையை மேம்படுத்தும் கேரட், முட்டை, பெர்ரி உள்ளிட்டவற்றை உங்கள் உணவு அட்டவணையில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)