WiFi பாஸ்வேர்டை எளிதாக கண்டுபிடிக்க சில வழிகள்!

Thu, 09 Feb 2023-2:22 pm,

விண்டோஸிலிருந்து பாஸ்வேர்டை மீட்டெடுக்க: Start > Control Panel > Network and Sharing Center என்பதற்கு சென்று, விண்டோஸ் கம்ப்யூட்டரில் Windows key + C ஐ தட்டவும்.  பின்னர் நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையத்தைக் கண்டறிந்து, அடாப்டர் அமைப்புகளை மாற்று என்பதைக் கிளிக் செய்து, வைஃபை நெட்வொர்க்கில் வலது கிளிக் செய்யவும்.  பின்னர் Status என்பதைக் கிளிக் செய்து, வயர்லெஸ் என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் பாஸ்வேர்டை பார்க்கலாம்.

 

Macலிருந்து பாஸ்வேர்டை மீட்டெடுக்க: Applications/Utility ஆப்ஷனிற்கு சென்று Keychain Access என்பதைக் கிளிக் செய்யவும்.  நெட்வொர்க்கை தேர்வு செய்து, அதை இருமுறை கிளிக் செய்யவும்.  இப்போது  show password ஆப்ஷனிற்கு சென்றால் அங்கு வைஃபை பாஸ்வேர்டு இருக்கும்.

 

வைஃபை பாஸ்வேர்டு ரிவியலர்: வைஃபை பாஸ்வேர்டு ரிவியலரை டவுன்லோடு செய்யவும், இது உங்களை ஸ்கைப் மற்றும் AVG TuneUp போன்றவற்றை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கும், அதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.  இதை இன்ஸ்டால் செய்ததும், நீங்கள் எல்லா வைஃபை நெட்வொர்க்குகளையும் அவற்றின் பாஸ்வேர்டையும் பார்க்க முடியும்.

 

ரூட்டரிலிருந்து வைஃபை பாஸ்வேர்டை மீட்டெடுத்தல்:  வைஃபை பாஸ்வேர்டை சேமித்த Windows அல்லது Mac கணினி உங்களிடம் இல்லையென்றால் அல்லது தொலைபேசி அல்லது டேப்லெட் வழியாக பாஸ்வேர்டை மீட்டெடுக்க ரூட்டர் உதவும்.  ரூட்டரின் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இது வேலை செய்யும், ஈதர்நெட் கேபிள் வழியாகவும் ரூட்டருடன் இணைக்கலாம்.  டேப்லெட் மற்றும் மொபைல் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படாவிட்டால் பாஸ்வேர்டை பார்க்க முடியாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link