இணையம் இல்லாதபோது நெட்பிளிக்ஸ் படங்களை பார்ப்பது எப்படி?
இப்போதெல்லாம், மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தில், தங்கள் பொழுதுபோக்குக்காக இணையத்தில் திரைப்படங்கள், சீரியல்கள் அல்லது வெப் தொடர்களைப் பார்க்கிறார்கள். ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நீங்கள் பயணம் செய்தாலும் அல்லது இணையம் இல்லாத இடத்தில் இருந்தாலும் கூட, நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் விரும்பும் திரைப்படங்கள் அல்லது தொடர்களை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். Netflix -லிருந்து படங்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில், நெட்பிளிக்ஸ் ஆப்பை திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் திரைப்படம் அல்லது வெப் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
திரைப்படம் அல்லது வெப் தொடரைத் திறக்கும்போது, கீழ்நோக்கி நகரும் அம்புக்குறியைக் காண்பீர்கள். இந்த குறி நீங்கள் பதிவிறக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இந்த குறி தெரியவில்லை என்றால், அந்த திரைப்படம் அல்லது வெப் சீரிஸை உங்களால் பதிவிறக்கம் செய்ய முடியாது.
டவுன்லோட் மார்க் மீது கிளிக் செய்யவும். நீங்கள் விரும்பினால், தரத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இதற்குப் பிறகு, நெட்பிளிக்ஸ் செயலியில் உள்ள ‘Download’ பகுதிக்குச் சென்று டவுன்லோடு ஆவதை காணலாம். பதிவிறக்கம் செய்வதற்கு இணைய இணைப்பு நன்றாக இருக்க வேண்டும்.
பதிவிறக்கம் முடிந்ததும், Netflix செயலியின் ‘Download’ பகுதிக்குச் சென்று நீங்கள் பதிவிறக்கிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களைப் பார்க்கலாம். டவுன்லோட் செய்யப்பட்ட படங்கள் நிரந்தரமானது அல்ல. நெட்பிளிக்ஸ் குறிபிட்ட நேர இடைவெளியில் நீக்குகிறது.
வெவ்வேறு படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு இந்த நேரம் வித்தியாசமாக இருக்கலாம். பொதுவாக இது 2 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை இருக்கும். உங்கள் நெட்பிளிக்ஸ் மெம்பர்ஷிப்பை ரத்து செய்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் உங்கள் சாதனத்திலிருந்து அகற்றப்படும்.
நீங்கள் மீண்டும் மெம்பர்ஷிப் எடுத்தால், அவற்றை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தொலைபேசியில் இணையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நீங்கள் விரும்பும் திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் பார்க்கலாம்.