டீக்கடைக்கு போனா இனி இதை வாங்கி குடியுங்கள்... உடலுக்கு மிகவும் நல்லதாம்!
லெமன் டீ குடிப்பதன் மூலம் உங்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை தணியும் என கூறப்படுகிறது.
லெமன் டீயை தொடர்ந்து குடிப்பதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பலன் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லெமன் டீயை குடிப்பவர்களுக்கு நீங்காத தொடர் தலைவலி பிரச்னை தீரும் என்றும், அதனை அறிகுறிகளின் போதே தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
லெமன் டீயை குடிப்பதன் மூலம் உங்களுக்கு உடல் செரிமான இயக்கம் நன்றாக இருக்கும்.
லெமன் டீயை சர்க்கரை இல்லாமல் குடித்து வந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
லெமன் டீ குடிப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் இயல்பாகவே வெளியேறும்.
சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளில் லெமன் டீ உங்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும்.