IND vs AFG: அணியில் இல்லாத முக்கிய வீரர்கள் யார் யார்?

Sun, 07 Jan 2024-11:03 pm,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறாத முக்கிய வீரர்கள் குறித்து இதில் காணலாம். 

 

இஷான் கிஷன் - கடந்தாண்டு தொடக்கம் முதல் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருவதால் இவருக்கு சற்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

பும்ரா - இவர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி நீண்ட நாளாகிவிட்டது. எனினும், டி20 உலகக் கோப்பை வரும் சூழலில் இவரும் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

சிராஜ் - சிராஜ் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் இதில் இடம்பெறாதது ஆச்சர்யமளிக்கிறது. 

 

ஷ்ரேயாஸ் ஐயர்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்தாலும் இதில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

 

கேஎல் ராகுல் - இவரும் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில்தான் விளையாடினார். அதன்பின் இவர் சர்வதேச டி20 போட்டியில் விளையாடவே இல்லை.

 

ஜடேஜா - இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா ஆப்கானிஸ்தான் தொடரில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link