6 மாதம் அன்லிமிடேட் கால்... தினமும் 3 ஜிபி டேட்டா - ஜியோவின் இந்த இலவசத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

Fri, 22 Sep 2023-11:09 pm,

ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இன்று தொடங்கியது. டெல்லி மற்றும் மும்பை ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று புது வரவு மொபைல்களையும், பிற சாதனங்களையும் வாங்கிச் சென்றனர். 

ஒருபுறம், பிளிங்கிட் நிறுவனம் ஆப்பிளின் புதிய வெளியீடான ஐபோன் 15 மாடலை சில நிமிடங்களில் வீட்டிற்கு டெலிவரி செய்கிறது. மறுபுறம், ஆப்பிள் ஐபோன் 15 விற்பனை உடன் ரிலையன்ஸ் ஜியோவும் ஒரு மிகப்பெரிய சலுகையை வந்துள்ளது. 

 

ஐபோன் 15 மொபைலை வாங்குபவர்களுக்கு ஜியோ நிறுவனம் 6 மாதங்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கே காணலாம். 

இந்த ஆஃபர் புதிய ப்ரீபெய்டு இணைப்புச் செயல்பாட்டிற்கானது. ரூ. 149 மற்றும் அதற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு இது பொருந்தும். ஜியோ அல்லாத வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையைப் பெற புதிய சிம்மைப் பெறலாம் அல்லது தற்போதுள்ள தங்கள் எண்ணை ஜியோவுக்கு மாற்றம் செய்யலாம்.

இந்தச் சலுகை இன்று செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் உள்ளிட்ட புதிய ஐபோன் சீரிஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் தனது கடைகளில் காலை 8 மணிக்கு திறந்து விற்பனை செய்தது. இதனால் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களை விரைவாக வாங்க முடிந்தது. நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகளில், வாடிக்கையாளர்கள் வங்கி கேஷ்பேக் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றனர். 

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை இந்தியாவில் இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன, அதே நேரத்தில் ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன் 15 Pro Max ஆகியவை கருப்பு டைட்டானியம், வெள்ளை டைட்டானியம், நீல டைட்டானியம் மற்றும் இயற்கையான வண்ணங்களில் கிடைக்கின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link