Samsung Galaxy S24 Series: கொட்டிக்கிடக்கும் AI அம்சங்கள் என்னென்ன?
சாம்சங் நிறுவனம் அதன் Galaxy S24 சீரிஸை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சீரிஸில் Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra என மூன்று ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த சீரிஸ் பயனர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது
இதற்காக பயனர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்த சீரிஸ் மொபைல்களில் லேட்டஸ்ட் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பல புதிய மற்றும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அம்சங்களில் சில பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளவை மற்றும் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும். இந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.
Live Translate: Galaxy S24 சீரிஸில் செயற்கை நுண்ணறிவு அம்சமான நேரடி மொழிபெயர்ப்பு வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் எந்த மொழியையும் பேசினாலும் அல்லது கேட்டாலும் பேச பேச அப்படியே மொழிப்பெயர்க்கும் வல்லமை உள்ளது. இந்த அம்சம் எந்த மொழியையும் பேசும் மக்களுடன் தொடர்பு கொள்ள உதவும்.
Interpretor: நேரடி மொழிபெயர்ப்பு அம்சத்தை போன்றுதான் என்றாலும், நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளுக்கு இடையில் மொழிபெயர்க்கலாம். இந்த அம்சம் எந்த மொழியிலும் இருவர் இடையே தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்.
Google's Circle to Search: இதுதான் Galaxy S24 சீரிஸில் வழங்கப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான செயற்கை நுண்ணறிவு அம்சங்களில் ஒன்றாகும். இந்த அம்சத்தின் மூலம், எந்த புகைப்படத்திலும் நீங்கள் ஒரு வட்டம் வரைந்து அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, ஒரு புகைப்படத்தில் காணப்படும் காலணியை நீங்கள் வட்டமிட்டால் அதன் நிறம், அதன் மாடல், அதை எங்கே விற்பனைக்கு கிடைக்கும், விலை எவ்வளவு உள்ளிட்ட தகவல்களை காண்பிக்கும் வல்லமை பெற்றது.
Chat Assist: இந்த சீரிஸ் ஸ்மார்ட்போனில் சேட் உதவி அம்சம் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்போட் ஆகும். இது பயனர் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்த உதவுகிறது. இந்த அம்சம் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களையும் அமைப்புகளையும் பயனர் புரிந்துகொள்ள உதவும்.