ஹைதராபாத் என்கவுண்டரில் நடந்தது என்ன? புகைப்படம் வாயிலாக
காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர், சரணடையும்படி கேட்டார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினோம், இந்த சம்பவத்தின் போது அவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரை குச்சிகளால் தாக்கி, பின்னர் எங்களிடமிருந்து ஆயுதங்களை பறித்தனர், காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கற்களைப் பயன்படுத்தி எங்களை தாக்க முயன்றனர், எங்கள் துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் 10 நாட்களாக காவல்துறை காவலில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் நாங்கள் விசாரித்தோம். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, சம்பவத்தை புனரமைக்க சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் அவர்களை அழைத்துச் சென்றோம்.