உயர் இரத்த அழுத்த சிகிச்சை: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்
உயர் இரத்த அழுத்தம், கோவிட் நோய்க்குப் பின் ஏற்படும் சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்பது கவலை கொடுப்பதாக உள்ளது. உணவுக் கட்டுப்பாடு ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்
உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று எடையைக் குறைப்பது ஆகும்.
தியானம் + பயிற்சி + உடற்பயிற்சி = ஆரோக்கியம்
மன அழுத்தம் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மன அழுத்த ஹார்மோன்கள் உங்கள் இரத்த நாளங்களை சுருக்கி இரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கும்
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க விரும்பினால், மது அருந்துவதைக் குறைக்க வேண்டும். அதிகமாக மது குடிப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தை பாதுகாக்க மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளவும்