ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2021: இந்தியா vs நியூசிலாந்து புகைப்படங்கள்!
"ரிசர்வ் டே" முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் வெற்றி பெறுவது யார் என அறிய இன்னும் 2 நாட்கள் உள்ளது.
போட்டியின் 5 வது நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டு உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 5 வது நாள் வானம் மிகவும் தெளிவாக இருக்கும்.
ஜூன் 18 ஆம் தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாள் மழை காரணமாக முற்றிலுமாக தடைபட்டது. டாஸ் போடக்கூட இரண்டு அணிகள் கேப்டன் களத்திற்கு வர முடியவில்லை.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தின் அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
ஒருவேளை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மாற்று நாள் (Reserve Day Rules) நடத்தப்பட்டால், அது ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.