இந்த 2 ராசியினரும் ஒன்றிணைந்தால் அவர்களின் வாழ்க்கை சொர்க்கம் தானாம்!!

Mon, 28 Sep 2020-2:31 pm,

சிம்ம ராசி அதிபதி சூரியன். அதே போல் துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி ஆவார். சிம்ம ராசிக்காரர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஒருவர் மீதான ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடிய தன்மை மிக்கவர்கள். 

அதே சமயம் துலாம் ராசியினர் சமாதானத்தை விரும்புபவர். காதல் மற்றும் கூடி வாழ்வதை விரும்புபவர். இதன் காரணமாக இந்த இரண்டு ராசிகள் சேர்வதால் பெரிய அளவில் அவர்களின் வாழ்வில் பிரச்சினை இல்லாமல், நல்ல புரிதலுடன் இருக்கக் கூடிய தம்பதிகளாக இருப்பார்கள்.

மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர். துலாம் ராசிக்கு சுக்கிர பகவான் அதிபதி. மிதுன ராசியினரின் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடக்கக் கூடிய மன நிலையைக் கொண்டிருப்பார்கள். 

துலாம் ராசியினர் எதை ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானத்தை விரும்பக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் இந்த இரு ராசிகள் திருமணத்தில் சேர்வதால் வாழ்வில் மகிழ்ச்சி ததும்பும். மேஷம் மற்றும் கும்பம்

மேஷ ராசி அதிபதி செவ்வாய். போர் குணம், சுறுசுறுப்பு, எந்த ஒரு விஷயத்திலும் உணர்வு பூர்வமாக, உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். அதே சமயம் கும்ப ராசி ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்னைகளை சிறப்பாகக் கையாள முடியும்.

கடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன். மேலும் தண்ணீரில் வாழக்கூடியது நண்டு. அதே போல் மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பாகத் தகிக்கும் இவர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள். நெருப்பாக இருக்கக் கூடிய மேஷ ராசியினாரை தண்ணீர் போல் குளுமையாக இருக்கும் கடக ராசியினர் தணிக்கக் கூடியவர்கள்.

இதனால் இருவரின் குறைபாடுகளை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அதை சமாளிக்கக் கூடிய திறன் கொண்டவர்கள் என்பதால் இந்த இணை சிறப்பாக இருக்கும். 

மீன ராசி அதிபதி குரு. தீய விளைவுகளிலிருந்து விடுவிப்பவரும். முன்வினை பலன்களை அளிக்கக் கூடியவர். இந்த இரண்டு ராசிகளும் நீர் ராசிகள். இதனால் இரு ராசிகளிடம் அதிக ஒற்றுமை இருப்பதால், எந்த விஷயத்திலும் இருவரிடையே ஒற்றுமையும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும். அதோடு இருவருக்கிடையே காதல், அன்பு என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ஒத்து வரும்.

ரிஷப ராசி அதிபதி சுக்கிரன், அதே போல் மகர ராசி அதிபதி சனி. இரு ராசி அதிபதிகளும் நட்பு கிரகம் என்பதோடு இரண்டும் நில ராசிகள். அதனால் இரண்டு ராசிகளும் ஒரே தன்மை உடையவை. இதனால் இரண்டு ராசிகளும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இருவரிடையே நம்பிக்கையும், புரிதலும் இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link