முடி அடர்த்தியாக வேண்டுமா..இந்த 7 யோகாசனத்தைச் செய்து பாருங்க பக்கா ரிசல்ட் கிடைக்கும்!
ஹஸ்த பாதசனம்:இந்த யோகாசனம் உங்கள் பாதத்தில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
யோகேந்திர சக்ராசனம்:இந்த யோகாசனம் செய்வதால் உங்கள் உச்சந்தலையின் இரத்தம் ஓட்டம் அதிகரித்து ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது.
அதோ முக ஸ்வனாசனா:இந்த யோகாசனம் உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவித்து சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது முடி உதிர்தலைக் குறைக்கிறது.
உஸ்த்ராசனம்:உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் பதற்றத்தைப் போக்கி நிம்மதியான மனநிலையை உருவாக்குகிறது. மேலும் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.
சர்வாங்காசனம்:மன அழுத்தத்தைக் குறைத்து முடி வளர்ச்சிக்கு ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது. மேலும் முடி அடர்த்தியாக வளர இந்த யோகாசனம் சிறந்தது.
ஹலாசனா:உடலுக்குச் சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது. மேலும் இது உடலுக்கு ஒட்டுமொத்த நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.
யோகா முத்திரை:இந்த யோகா முத்திரை உடலுக்கு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவை முடி ஆரோக்கியத்தை ஆதரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)