ஜாக்கிரதை ! தூக்கத்தில் திடீரென்று கீழே விழுவதுபோன்ற கனவா !!
பொதுவாக அதிகாமான மக்களுக்கு இதுபோன்ற கனவு வருகிறது என்று சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் ஏன் இதுபோன்ற கனவு வருகிறது என்று பலரும் சிந்தித்தனர். அப்போது பல மருத்துவர்கள் இதுப்பற்றி கூறியதை கேட்டால் அதிர்ச்சி வரும்.
கனவுகள் இல்லாத தூக்கம் யாருக்கும் அமைவதில்லை, அனைவரும் ஏதோ ஒரு கனவில் தூக்கத்தில் மிதப்போம். நாம் நினைக்கும் கனவுகளில் இதுவும் ஒன்று. நம்மை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கும்போது சட்டென்று கீழே விழுவது போல் நிகழும். ஆனால் விழித்துப் பார்த்தால் அது நிகழ்ந்திருக்காது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் உங்களிடம் இருக்கும் குறைவான தன்னம்பிக்கை போன்றவை இந்த கனவிற்கு வழிவகுக்கும். எதிர்வரும் வாழ்க்கையை நினைத்து தற்போது பயப்படுபவர்களுக்கு இது போன்ற கனவு நிகழலாம் என்று கூறுகின்றனர்.
அதிகமானோர் ஆழ்ந்த யோசனைகளில் இருக்கின்றனர். உங்களுடைய கவலைகள், துன்பங்கள் தூங்கும்போது நினைக்கிறீர்கள். இந்த மன அழுத்தத்தின் எதிர்வினையாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது.
காய்ச்சல் அல்லது ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்ற கனவு வரும் என்று கூறப்படுகிறது. உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதுபோன்ற கனவு ஒரு சிலருக்கு மட்டும் இது நடப்பதில்லை. மன அழுத்தத்தில் உள்ள அனைவருக்கும் இந்த கனவு வரும் என்று சொல்லப்படுகிறது.
தூக்கமின்மையை இழந்து தேவையற்ற சிந்தனையில் இருப்பவர்கள் தூக்கத்தில் உயரமான இடத்திலிருந்து விழுவதுபோன்ற நிகழ்வு நடக்கும். மேலும் சுவாசப்பிரச்சனை உள்ளவர்களுக்குத் தூக்கம் சற்று தாமதமாக வரும். அதுமட்டுமில்லாமல் நிம்மதியான தூக்கம் அவர்களால் தூங்கமுடியாது என்று சொல்லப்படுகிறது.
தூக்கத்தில் உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதுபோன்ற கனவு என்பது தன்னம்பிக்கை குறைவானவர்களிடம் இந்த கனவு அதிகமாகத் தாக்கப்படும். தன்மீது நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லாம் என்ற எண்ணம் உருவானால் மட்டுமே கெட்ட கனவுகள் நம்மை நெருங்காது. தனிமை உணர்விற்கு உங்களின் மனதிற்கு இடம் கொடுக்காதீர்கள். இது ஆபத்தான மன நிலையை உருவாக்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.
இந்த கனவின் அர்த்தம் என்னவென்றால் வாழ்க்கையில் கட்டுப்பாட்டை இழக்கும் என்ற பயம் வெளிப்படுத்துவதாக இருக்கலாம். உதாரணமாக குடும்பம், வேலை மற்றும் உறவு இதுத் தொடர்பானதில் இருக்கலாம்.