Tea Facts: இந்த நேரத்தில் டீ குடித்தால் அதன் முழு நன்மைகள் உங்களுக்கே!
)
தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிக அளவில் அருந்தப்படும் பானம் தேநீர் என்று அமெரிக்காவின் தேயிலை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான பானமான கருதப்படும் தேநீர், இருதய நோய்கள் (cardiovascular diseases), சில வகையான புற்றுநோய், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
)
ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ இரண்டும் இதயத்திற்கு ஆரோக்கியமானவை. இயற்கையான தாவரக் கூறுகளைக் கொண்டுள்ள அவை இரண்டுமே ஆரோக்கியமானவை. அதுமட்டுமல்ல தேநீரை வழக்கமாக குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயங்கள் குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
)
காலையில் எழுந்தவுடனே தேநீர் குடிப்பது, பானத்தை அருந்துவதற்கான சரியான நேரம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், காலை உணவுக்குப் பிறகு தேநீர் குடிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை நேரத்திலும், உணவு உண்ட பிறகும், மனிதர்களின் ஆற்றல் அளவுகள் மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, எனவே காலை உணவுக்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு தேநீர் அருந்துவதை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தேநீரில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. எனவே தேநீர் குடித்தால், உடலில் நீர்த்தன்மை குறைந்துவிடும் என்ற கருத்து சரியானதில்லை.