கீழே போடாதீர்கள்.. கறிவேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் 10 அதிசயம்!
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பொதுவாக அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் தொப்பை விழுவது. தினமும் காலையில் விறும் வயிற்றில் 15 கருவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டு வந்தாலே உங்களுடைய வயிற்றில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி தொப்பையை குறைக்கிறதுக்கு உதவி கரமாக இருக்கும்.
ரத்த சோகைக்கு தீர்வாக கருவேப்பிலை இருக்கிறது. அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை பிரச்சனை இருக்கிறவர்கள் தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயித்துல கருவேப்பிலை இலையை ரெண்டே ரெண்டு பேரிச்சம் பழத்தோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ரத்த சிகப்பணுக்கள் அதிகரித்து ரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
சர்க்கரை நோய் இருந்தால் தினமும் காலை வெறும் வயித்துல கருவேப்பிலையை சாப்பிட்டு வரும்போது ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவை சீராக வைத்துக்கொள்ளலாம். கருவேப்பிலையை துவையலாகவோ, காலையில் வெறும் வயித்தில் சாப்பிடும் போதோ சுகருடைய அளவு கண்ட்ரோல் ஆகும்.
இதயத்தை பாதுகாப்பதற்கு நீங்க கருவேப்பிலை எடுத்துக்கலாம். கருவேப்பிலை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைச்சு நல்ல கொழுப்புகளை அதிகரிச்சு இதய நோய் வராமல் உங்களை பாதுகாக்கும். இதன்மூலம் இதயம் சார்ந்த பக்கவாதம், மாரடிப்பு போன்ற அபாயம் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் வெறும் வயித்து கருவேப்பிலையை மென்னு சாப்பிட்டு வந்தாலே செரிமான பிரச்சனைகள் சரியாகும். ஒருவேலை மென்னு சாப்பிட சங்கடமா இருந்தால் கருவேப்பிலை துவையலாக சேர்த்துக்கலாம். இதன்மூலம் மலச்சிக்கல் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சளி தொல்லைக்கும் கருவேப்பிலை நல்லது. கருவேப்பிலையை காய வைத்து பொடி செய்து தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளில் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
முடி நன்றாக வளர்வதற்கு, அடர்த்தியாக கருகருவென்று வளர்வதற்கு கருவேப்பிலை மிகவும் பயன் உள்ளது. தினமும் 15 கருவேப்பிலை இலைகளை காலையில் வெறும் வயித்தில் சாப்பிட்டு வரும்போது முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். அடர்த்தியாக முடி வளர்வதை ஒரு சில வாரங்களில் உணர முடியும்.
கல்லீரலை பாதுகாப்பதற்கு கருவேப்பிலையை எடுத்துக்கலாம். கருவேப்பிலையில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.
கருவேப்பிலை பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியது.
கருவேப்பிலை ஜூஸ் உங்களுடைய ரத்தத்தில் இருக்கக்கூடிய வெள்ளை அணுக்களை பலப்படுத்தி உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே கருவேப்பிலையை தங்களுடைய உணவுகளில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.